சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர் மேல் நம் ஆடையில் இருக்கும் நூலை எடுத்து போடுவது ஏன்? கைகளை தட்டி வழிபடுவது ஏன்? உண்மை காரணத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

sandikeswarar-temple

பஞ்சமூர்த்திகளில் ஒருவராக இருக்கும் சண்டிகேஸ்வரரை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். சிவாலயங்களில் கருவறையின் இடது பக்கத்தில் தியான நிலையில் அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரர் உலாவின் போது இறுதியாக பங்கு எடுத்துக் கொள்பவர். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு சண்டிகேஸ்வரர் பதவி ஏற்கிறார் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் வழிபடும் முறைகளை பற்றிய கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sandikeswarar

சண்டிகேஸ்வரர் என்பவர் ஈசனுக்கு பக்தர்கள் படைக்கும் உணவு மற்றும் அவருக்கு சாற்றப்படும் வஸ்திரத்திற்கு அதிபதியாக இருப்பவர் ஆவார். சண்டிகேஸ்வரர் பதவியை மற்ற தெய்வங்களும் ஏற்பது உண்டு. இந்த வரிசையில் பிரம்மதேவர், நாயன்மார்கள், எமன் ஆகியோரும் இப்பதவியை வகித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவன் கோவில்களுக்கு நாம் செல்லும் பொழுது அங்குள்ள சண்டிகேஸ்வரர் சன்னிதியை அடையும் பொழுது அவரை வலம் வந்து வழிபட கூடாது என்கிற நியதியும் உண்டு.

சண்டிகேஸ்வரர் தியானத்தில் இருப்பவர். அவருடைய தியானம் கலைக்கும் விதமாக வலம் வந்து வழிபடுவது நமக்கு நன்மை அல்ல. எனவே கோவிலில் சண்டிகேஸ்வரரை தவிர்த்து மற்ற தெய்வங்களை வலம் வருவது முறையாகும். அது போல் சண்டிகேஸ்வரரை கை தட்டி வணங்குவதும், சொடக்கு போட்டு வழிபடுவதையும் பார்த்திருப்போம். சண்டிகேஸ்வரரை இவ்வாறு வழிபடுவது முற்றிலும் தவறானது.

sandikeswarar

தியான நிலையில் இருக்கும் சண்டிகேஸ்வரரை கை தட்டி வணங்குவது, சொடக்கு போட்டு வணங்குவதும் தியானத்தை கலைப்பதற்கு சமமாகும். அமைதியான முறையில் அவரை வழிபடுவது தான் மிகவும் நல்லது. இவ்வாறு அவரை வழிபடுவதற்கு காரணம் உண்டு. சிவன் சொத்து குலநாசம் என்பது அனைவரும் அறிந்த ஜோதிட பழமொழி ஆகும். இந்த பழமொழியின் அடிப்படையில் சிவன் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் இறுதியாக சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு சென்று சிவன் கோவிலில் இருந்து நாங்கள் எதையும் எடுத்து செல்லவில்லை வெறும் கையோடு தான் வெளியில் செல்கிறோம் என்பதை தெரிவித்து விட்டு வெளியேறுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

அது போல சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவுக்கும், உடைக்கும் அதிபதியாக இருப்பதால் நம் ஆடைகளில் இருந்து நூலை எடுத்து அவர் மேல் போட்டுவிட்டு வரும் வழிபாடும் நடைபெற்று வருகிறது. நம் ஆடைகளில் இருந்து ஏதாவது ஒரு பகுதியில் இருக்கும் நூலினை சிறிய அளவில் எடுத்து சண்டிகேசுவரர் மேல் போடுவது என்பது ஒரு தெய்வ நம்பிக்கைக்கு உரிய வழிபாடு ஆகும். சிவபெருமானுடைய உடைகளுக்கு அதிபதியாக இருக்கும் சண்டிகேஸ்வரர் வழிபாட்டில் இப்படி நூலினை போடுவது புதிய ஆடைகளை பெருக செய்யும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

sandikeswarar1

மேலும் சண்டிகேஸ்வரர் இன்றும் பன்முகம் கொண்டு பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இவரை ஆலய கணக்கராக வைத்திருப்பதால் சிவன் கோயிலில் நாம் செய்யும் விஷயங்களை கணக்குடன் கூறி விடுவார் என்கிற பயமும் உண்டு எனவே இனியும் கைதட்டி வழிபடுவது, ஆடைகளில் இருக்கும் நூலை எடுத்துப் போடுவது போன்ற செயல்களை செய்வதை நிறுத்தி விடலாம். சண்டிகேஸ்வரரை அமைதியான முறையில் வழிபடுபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே சமயத்தில் இறை நெறியும், சிவாலய தரிசனத்திற்கு உரிய பலன்களையும் பெறலாம்.