இந்த 2 செடிகள் வீட்டில் இருந்தால் இதை செய்ய மறந்து விடாதீர்கள்! அதிர்ஷ்டம் வர இப்படி செய்யலாமே!

thulasi

எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இரண்டு செடி என்றால் அது இவைகள் தான். இந்த இரண்டு செடிகள் வீட்டில் இருப்பதால் நிறைய அதிர்ஷ்டங்கள் வரும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆன்மீகத்தில் முக்கிய இடம் வகிக்கும் இந்த இரண்டு செடி வகைகளை பெரும்பாலும் வீட்டில் நிச்சயம் அனைவரும் வைத்திருப்பார்கள். அந்த காலத்திலெல்லாம் எல்லோருடைய வீட்டிலும் இந்த இரண்டு செடிகள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

thulasi-theertham

ஆனால் இப்போது இருக்கும் நவீன யுகத்தில் இடப் பற்றாக்குறையால் இதனை தவிர்த்து வருகிறோம். ஆனால் முக்கியமாக இந்த செடிகளை வீட்டில் வளர்ப்பதால் ஏராளமான நன்மைகளும், அதிர்ஷ்டங்களும் நமக்கு ஏற்படும் என்பது உண்மையானது. அம்பாளுக்கு உகந்த இந்த இரண்டு செடிகளும் சாட்சாத் அந்த அம்பாளின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. விஷ ஜந்துக்களும், துஷ்ட சக்திகளையும் தகர்த்தெறியும் இந்த இரண்டு செடி வகைகளை குறிப்பிட்ட இந்த திசையில் வைப்பதால் அதிர்ஷ்டம் வரும் என்று கூறப்படுகிறது. அது எந்த திசை? ஏன் இந்தச் செடிகளை வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டும்? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

வீட்டில் வளர்க்க வேண்டிய ஆன்மீக செடியாக இருப்பது துளசி. துளசியின் மகத்துவத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. வீட்டில் துளசியை வைத்து இருந்தாலே அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விடும். அதேபோல் அம்பாளின் அம்சமாக பார்க்கப்படும் வேப்பமரம் அதீத சக்தியை கொண்டுள்ளது. வேப்ப மரம் மற்றும் துளசி இந்த 2 செடி வகைகள் வீட்டின் கிழக்குப் பக்கமாக வைத்திருப்பது யோகத்தை தரும்.

Amman

சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு திசையில் இந்த ஆன்மீக செடிகளை வளர்த்து வந்தால் நிச்சயமாக உங்களுக்கு யோகம்தான். செடி வகைகளை வைத்தால் மட்டும் பத்தாது. அதனை முறையாக பராமரித்து வர வேண்டும். வீட்டின் நுழை வாசல் மற்றும் துளசிச் செடி, வேப்ப மரம்இந்த மூன்று இடங்களிலும் மஞ்சள் குங்குமமிட்டு வழிபட்டால் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது ஐதீகம்.

- Advertisement -

செவ்வாய் வெள்ளி மற்றும் பௌர்ணமி தினங்களில் இது போல் செய்வது மிகவும் விசேஷமானது. நம்முடைய பிரதான நுழைவாயிலில் மஞ்சள் குங்குமம் வைப்பது எதற்காக தெரியுமா? தலைவாசலில் மஞ்சள் குங்குமம் வைத்தால் அந்த வீட்டிற்குள் எந்த துஷ்ட சக்திகளும் நுழைய முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால் தான் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று தலைவாசலில் இவ்வாறு செய்கிறார்கள். அதே போல துளசி செடிக்கு மஞ்சள் குங்குமம் கட்டாயம் வைக்கவேண்டும். வேப்ப மரம் இருந்தால் வேப்ப மரத்திற்கும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதே போல மாதுளை செடி வைத்திருப்பவர்கள் மாதுளை வாசம் செய்யும் மகாலட்சுமியை நினைத்து மஞ்சள் குங்குமம் வைக்கலாம்.

Pournami days in Tamil Calendar

பௌர்ணமி தினங்களில் துளசி, வேப்ப மரத்திற்கு வாசனை மிக்க மலர்களை சாற்றில் மஞ்சள், குங்குமம் இட்டு அதற்கு அருகாமையில் பச்சரிசி மாவில் கோலம் போட்டு ஒவ்வொரு அகல் விளக்குகளை மட்டும் ஏற்றி வையுங்கள். இது போல் தலைவாசல் இன்னும் இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைக்கலாம். இப்படி செய்வதால் அதிர்ஷ்டம் உங்களை நோக்கி நிச்சயமாக திரும்பும் என்று பல்வேறு ஜோதிட நூல்கள் எடுத்துரைக்கிறது. வீட்டை எப்பொழுது மகா லட்சுமி கடாட்சத்துடன் வைத்திருங்கள். உங்களுடைய வாஸ்து குறைகள்,சுய ஜாதகத்தில் இருக்கும் காரணம் கர்ம வினைகள் கூட இப்படி செய்வதால் குறைந்து விடும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
48 நாட்கள் இந்த பூஜையை செய்பவர்கள் வீட்டில், எந்த கெட்ட சக்தியாலும் நெருங்கவே முடியாது. பல ஹோமங்கள் வீட்டில் நடத்திய பலனை தரக்கூடிய அற்புதமான சக்தி இந்த ஒரு பூஜைக்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.