வாழ்வில் அதிஷ்டமே இல்லை என்ற கவலையா? இதை செய்து பாருங்கள் அதிஷ்டம் தானாக தேடி வரும்.

adhistam

எதிர்பாராமல் நமக்கு அதிகளவு நன்மைகள் ஏற்படுவதை அதிர்ஷ்டம் என்பார்கள். இந்த அதிர்ஷ்ட நிலை என்பது எல்லோருக்கும் வாழ்வில் ஏற்பட்டு விடுவதில்லை சித்தர்கள் மற்றும் மகான்களின் கணிப்புப்படி முற்பிறவியில் பிறருக்கு அதிகளவு நன்மைகள் செய்தவர்களுக்கு இப்பிறவியில் அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமையும் என கூறியுள்ளனர். ஆனால் நம்மில் பலருக்கும் அதிஷ்டம் என்பது வாழ்வில் ஏற்பட வில்லை என்றாலும் அதிர்ஷ்ட தேவதை நம் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் நமது வாழ்க்கையில் சில விதிமுறைகளை பின்பற்றுவதால், நம்முடைய வாழ்வும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக மாறும் என அனுபவம் வாய்ந்த மகான்கள், தாந்திரீக சாஸ்திர நிபுணர்கள் கூறியுள்ளனர். நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஏற்படச் செய்யும் அந்த எளிய பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தங்கத்திற்கு அடுத்து அதிக மக்கள் விரும்பி வாங்கி நகையாக அணிந்துகொள்ளும் உலோகமாக இருப்பது வெள்ளி ஆகும். இந்த வெள்ளி என்பது சுக்கிர பகவான் மற்றும் லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்ததாக கருதப்படுகிறது. வெள்ளிப் பொருட்களை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படுவதாக தாந்திரீக சாஸ்திரம் கூறுகின்றது. அதிலும் குறிப்பாக தினமும் வெள்ளித் தட்டில் பால்சோறு அல்லது பால் கலந்து செய்யப்பட்ட வேறு ஏதாவது உணவு வகையை சாப்பிடுபவர்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியின் அருள் ஆசிகள் அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்பது தாந்திரீக சாஸ்திர நிபுணர்களின் திடமான நம்பிக்கையாகும். எனவே தான் பல வட இந்திய பணக்காரர்கள் தங்கள் வீட்டில் உணவை வெள்ளித் தட்டில் சாப்பிடும் இந்த ரகசிய தாந்திரீக முறையை மேற்கொண்டு வாழ்வில் மேன்மேலும் செல்வங்களை சேர்க்கின்றனர்.

தற்காலத்தில் ஆண்களும், பெண்களும் நாகரீகம் என்ற பெயரில் அடர் கருப்பு நிற ஆடைகளை அணிந்து கொண்டு வெளியில் செல்கின்றனர். பொதுவாக கருப்பு நிற ஆடைகளை பாதத்திற்கு மேலும், இடுப்பு மற்றும் இடுப்பிற்கு மேலும் அணியக்கூடாது. இந்த அடர் கருப்பு நிறம் என்பது எதிர்மறை ஆற்றலின் நிறமாகும். நவகிரகங்களில் ஒரு மனிதனுக்கு அதிக அளவில் சோதனைகளையும், இறைவனின் பிரதிநிதியாக அந்த நபரின் கர்ம வினைக்கேற்ப தண்டனைகளை வழங்கும் நீதி தேவனாகவும் இருக்கின்ற சனிபகவானுக்குரிய நிறமாகவும் கருப்பு நிறம் திகழ்கிறது. மேலும் கருப்பு நிறம் கெட்ட ஆவிகள், துர்தேவதைகள் போன்றவற்றை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறமாகும். எனவே தான் தீய மாந்திரிக கலையை பயிலும் நபர்கள் கருப்பு நிற ஆடைகளை அதிகம் அணிகின்றனர். எக்காரணத்தைக் கொண்டும் இல்லறத்தில் இருக்கின்ற ஆண்களும் பெண்களும் கருப்பு நிற ஆடைகளை அணியாமல் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து கருப்பு வண்ண ஆடைகளை அணிந்து செல்லும் நபர்களுக்கு தொடர் தோல்விகள், துரதிஷ்டம் போன்றவை வாழ்வில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

krambu

உங்கள் வீட்டிற்கருகில் இருக்கின்ற பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடும் பொழுது லட்சுமி தாயாருக்கு ஐந்து கிராம்புகளை நைவேத்தியமாக வைத்து, நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படவும், உங்கள் தொழில், வியாபாரங்களில் அதிகளவு லாபங்கள் ஏற்படவும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப் பெறுவீர்கள்.

- Advertisement -

aala-maram

உங்கள் வீட்டில் இருக்கின்ற சுமங்கலிப்பெண்கள் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் மாலை நேரத்தில் உங்கள் வீட்டிற்கருகில் இருக்கின்ற ஆலமரத்திற்கு அடியில் கடுகு எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி அந்த ஆலமரத்தை 9 அல்லது 27 எண்ணிக்கையில் சுற்றி வந்து வழிபாடு செய்வதால் உங்களின் செல்வ நிலை சிறிது, சிறிதாக அதிகரிக்கச் செய்யும்.

business-shop

உங்கள் தொழில் அல்லது வியாபார கூடத்தில் ஒரே வளர்பிறை வெள்ளிக்கிழமை தினத்தன்று, அந்த இடத்தை நன்கு சுத்தம் செய்து, சிறிதளவு கங்கை தீர்த்தத்தை கடையின் நான்கு மூலைகளுக்கும் தெளித்து, ஊதுபத்தி தூபங்கள் காட்டி வழிபாடு செய்வதால் கடையில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி உங்களுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை அமைய வழிவகைச் செய்யும்.