ஆடி அமாவாசை 2018 முழு விவரம்

- Advertisement -

மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று இறந்த நம் முன்னோர்களுக்கு விரதம் இருப்பது நல்லதொரு பலனை தரும் என்றாலும் தை, ஆடி, புரட்டாசி போன்ற மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் ஆன்மீக ரீதியாக முக்கியத்தும் வாய்ந்தவை ஆகும். அதிலும் ஆடி அமாவாசை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை 10-8-2018 மாலை 6:48 மணிக்கு தொடங்கி அடுத்தநாள்(11-8-2018) மாலை 4:22 மணி வரை  ஆகும்.

Amavasya-Poornima

ஆடி அமாவாசை சிறப்பானது ஏன்?

ஜோதிட ரீதியாக பொதுவாக சந்திரன் பகவான் ஆடி மாதத்தில் கடக ராசியில் உச்சம் பெறுவார், சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பார். சிவ அம்சமான சூரியனும், சக்தியின் அம்சம் பெற்ற சந்திரனும் ஆடி அமாவாசை அன்று ஒன்றிணைவர். அதனால் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது

- Advertisement -
ஆடி அமாவாசையில் திதி கொடுக்கலாமா?

சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றிணையும் புனிதமான ஆடி அமாவாசை அன்று இறந்த நம் முன்னோர்களுக்கு திதி கொடுத்து புண்ணிய நதிகள், கடல் போன்ற நதிகளில் நீராடி, இஷ்ட தெய்வங்களை வழிப்பட்டு, அன்னதானம் போன்றவை செய்தால், நம்மிடம் உள்ள பாவங்கள் விலகி, புண்ணியங்கள் சேரும்.

mahalaya-ammavasai

ஆடி அமாவாசையில் விரதம் இருப்பது எப்படி?

ஆடி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து அருகில் உள்ள கடல், ஆறு போன்ற நீர்நிலைக்கு சென்று குளித்து விட்டு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

அதன் பின் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பெண்கள் காலை உணவை சாப்பிடாமல், இறந்த முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை செய்ய வேண்டும். விரதத்திற்கு சமைக்கும் உணவில் அனைத்து விதமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Amavasai viratham

இறந்த முன்னோர்களின் எண்ணிக்கையை பொருத்து, இலைகளை போட்டு சமைத்த உணவு மற்றும் துணிகளை வைத்து அகல் விளக்கேற்றி, தீபம் காட்டி, வணங்கி விட்டு, அந்த உணவுகளை காகத்திற்கும் படைக்க வேண்டும். அதன் பின் பசுவிற்கு அகத்திக்கீரையை கொடுக்க வேண்டும்.

- Advertisement -

food

இந்த விரத வழிப்பாட்டினால், முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி, அவர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். அதோடு விரதம் இருப்பவர்களின் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:
கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரம் சார்ந்த பதிவுகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்

English Overview:
Here we have Aadi Amavasai 2018 date Tamil and also we have details for Aadi Amavasai tharpanam in Tamil.

- Advertisement -