ஆடி மாதம் அம்மனை மகிழ்விக்க இந்த நெய்வேத்தியம் செய்து படைத்து அம்மனின் பரிபூரண அருளை பெறுங்கள்.

amman neivethiyam
- Advertisement -

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். அம்மனை இந்த மாதத்தில் வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு போன்ற இறை அம்சம் நிறைந்த நாட்கள் பல இந்த மாதத்தில் உண்டு. எனவே ஆடி மாதம் முழுவதுமே சக்தி பொருந்திய மாதமாகும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூஜை செய்யும்பொழுது அம்மனுக்காக நாம் தயார் செய்யவேண்டிய முக்கியமான ஒரு நெய்வேதியத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

kumari-amman

நெய்வேத்தியம் செய்ய தேவையான பொருட்கள் :
தேங்காய் – அரை மூடி, வெல்லம் – 200 கிராம், ஏலக்காய் பொடி – சிறிதளவு, நெய் – 50 கிராம், முந்திரி –சிறிதளவு திராட்சை – சிறிதளவு, உப்பு –சிறிதளவு.

- Advertisement -

முதலில் அரை மூடி தேங்காயை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். துருவிய தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். அரைத்து எடுத்த விழுதினை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்ட வேண்டும். வடிகட்டிய பிண் மீதமுள்ள தேங்காய் திப்பியை மறுபடியும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்ட வேண்டும். இவ்வாறு இரண்டு முறை மட்டுமே தேங்காயை அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

coconut-milk1

அதன்பின் அடுப்பை பற்ற வைத்து அதன்மீது ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் 50 கிராம் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி மற்றும் திராட்சை சேர்க்க வேண்டும். அவை நன்றாக பொன்னிறமாக பொறிந்தவுடன் ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதே கடாயில், எடுத்து வைத்துள்ள வெல்லத்தை தூள் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து சிறிதுநேரம் கொதித்த பின்னர் அதனுடன் வடிகட்டிய தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். பின்னர் இனிப்பு சுவையைக் கூட்டுவதற்கு ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும். தேங்காய் பால் சற்று சூடு ஏறியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

vellam

அதிக நேரம் தேங்காய் பாலை கொதிக்க வைத்தால் அது திரிதிரியாக மாறிவிடும். எனவே அதிக நேரம் கொதிக்க விடாமல் சிறிது சூடானதும் இறக்கிவிட வேண்டும். அதன் பின் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சைகளை அதனுடன் சேர்த்து கிளறிவிட வேண்டும். அவ்வளவுதான் தேங்காய்ப்பால் நெய்வேத்தியம் தயாராகிவிட்டது.

ஆடி மாதம் பூஜை செய்யும்பொழுது அம்மனுக்கு பிடித்த இந்த நெய்வேதியத்தை அம்மனுக்கு படைத்தது உங்கள் பூஜையை சிறப்பாக செய்து மகிழுங்கள்.

- Advertisement -