Afghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்

Afghanistan
- Advertisement -

இந்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இறுதியில் துவங்க உள்ளது இதற்கான அணிகள் கிட்டத்தட்ட தயாராகி விட்டது என்றே கூற வேண்டும் இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரரான முஹம்மத் சேஷாத் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Worldcup

அதில் அவர் கூறியதாவது : சென்ற முறை 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு நாங்கள் தேர்வாகும் அணி என்று நம்பவில்லை. ஆனால், தேர்வாகி அந்த தொடரில் ஒரு போட்டியினை வென்றோம் ஆனால் இந்த 2019ஆம் ஆண்டு 4 முதல் ஐந்து போட்டிகளை உங்களால் வெல்ல முடியும்.

- Advertisement -

ஏனெனில் எங்களது சமீபகாலமாக பல பெரிய அணிகளை வீழ்த்தியுள்ளது. மேலும், ரஷித் கான் நபி போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் எங்கள் அணியில் உள்ளனர் எனவே இந்த வரும் உலக கோப்பை தொடர் எங்கள் அணிக்கு சிறப்பாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

Rashid

இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையே கோப்பையை கைப்பற்ற பலத்த போட்டி நிலவும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:

Virat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -