வீட்டில் மற்றும் கோவில்களில் அகல் விளக்கு ஏற்றுவதன் நவகிரக தத்துவங்கள் என்ன? அகல் விளக்கு ஏற்றுவதால் இவ்வளவு பலன்கள் உண்டா?

navagraham-vilakku
- Advertisement -

குத்து விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு, குபேர விளக்கு என்று விதவிதமான விளக்குகள் இருந்தாலும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண் அகல் விளக்கிற்கு எதுவுமே ஈடு இணை இல்லை. இயற்கையாகக் கிடைக்கும் மண்ணால் கொண்டு செய்யப்படும் அகல் விளக்கு அளப்பரிய பலன்களை கொடுக்கும். அகல் விளக்குகள் நவக்கிரகங்களையும் தத்துவமாக தன்னுள்ளே அடக்கியுள்ளது. அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

agal-vilakku

அகல் விளக்கு ஏற்றுவதால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சாஸ்திரங்கள் அகல் விளக்கை பற்றி நிறையவே குறிப்பிட்டு கூறுகிறது. வீட்டிலும், கோவில்களிலும் அகல் விளக்கு தீபங்களை ஏற்றினால் ஒளி மயமான எதிர்காலம் உண்டாகும் என்பது ஐதீகம். அதனால் தான் கோவில்களுக்கு செல்லும் பொழுது அகல் விளக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அகல் விளக்கில் நவகிரஹ தத்துவங்களும் அடங்கியுள்ளது. அகல் விளக்கு ஆனது சூரியனை குறிப்பிடுகிறது. அதில் ஊற்றப்படும் நெய் அல்லது எண்ணெய் போன்ற திரவங்கள் சந்திர பகவானை குறிப்பிட்டுக் கூறுகிறது. அதில் போடப்படும் திரியானது புத பகவானை குறிக்கிறது. தகதகவென எரியும் சுவாலை செவ்வாய் பகவானையும், அதனுடைய கீழே விழும் நிழல் ராகு பகவானையும் குறிப்பிட்டுக் கூறுகிறது.

navagragham-1

நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் மஞ்சள் நிறமானது குரு பகவானையும், விளக்கு தீபம் அணைந்து முடிந்த பின் கிடைக்கும் கரியானது சனி பகவானையும் குறிக்கிறது. தீபத்திலிருந்து பரப்பும் வெளிச்சம் ஞானத்தை அதாவது கேது பகவானை குறிப்பிடுகிறது. சுக்கிர பகவான் தான் நம் ஆசைகளுக்கு காரணம்! ஆசைகளே நம் துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறுகிறார். அந்த வகையில் சுக்ர பகவான் அகல் விளக்கு தீபம் எரிய எரிய குறைந்து கொண்டே வருவது ஆகும். நாம் எந்த அளவிற்கு ஆசைகளைக் குறைத்துக் கொள்கிறோமோ! அந்த அளவிற்கு வாழ்வும் இருக்கும் என்பதை உணர்த்தவே அகல் விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது.

- Advertisement -

அகல் விளக்கில் நவகிரகங்களும் அடங்கியுள்ளது. நவக்ரஹ தோஷங்கள் நீங்க அகல் விளக்கு தீபத்தை தொடர்ந்து கோவில்களில் ஏற்றி வருவது சிறப்பு பலன்களை கொடுக்கும். மேலும் விளக்கு ஏற்றும் பொழுது நவக்ரஹ மந்திரங்களை உச்சரித்து விட்டு ஏற்றினால் சகல சம்பத்துகளும் உண்டாகும். தோஷங்கள் நீங்க நீங்கள் செய்யும் மிக சிறந்த பரிகாரம் அகல் விளக்கு தீபம் ஏற்றுவது என்பதும் தான். அகல் விளக்கு ஏற்றும் போது இரண்டு திரிகளை போட்டு ஏற்றுவது முறையாகும்.

agal vilakku

அகல் விளக்கு தீபத்தில் எரிந்து முடிந்த பின் கிடைக்கும் கருமை நிற சாம்பலை சனி பகவானாக நினைத்து நெற்றியில் இட்டுக் கொண்டால் நம்மைப் பிடித்த பீடைகள், தரித்திரங்கள் அனைத்தும் ஒழியும். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலக தினந்தோறும் அகல் விளக்கு தீபத்தை ஏற்ற வேண்டும். எப்பொழுதும் வீட்டின் நிலை வாசலில் குலதெய்வம் குடியிருப்பதால் அங்கு இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது அவர்களின் அருளை பரிபூரணமாக பெற்று கொடுக்கும். இப்படி அகல் விளக்கை பற்றிய நிறைய கருத்துக்கள் சாஸ்திரங்களில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளன. எனவே அகல் விளக்கு தீபத்தை ஏற்றி அனைவரும் வாழ்வில் நல் ஒளி பெறலாம்.

- Advertisement -