அகத்தியருக்கு இந்த முறையில் பூஜை செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி பல்வேறு பலன்களை பெறலாம் தெரியுமா?

Agathiyar
- Advertisement -

சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்தரிஷிகளில் ஒருவராகவும் இருக்கும் அகத்தியரை எப்படி எல்லாம் வழிபடலாம், அவரை வழிபடுவதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும், அவருடைய சிறப்புக்கள் என்ன? அவர் இயற்றிய நூல்கள் என்னென்ன? இப்படி அகத்தியர் குறித்த பல்வேறு தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

agathiyar

அகத்தியர் பெருமானை வழிபடும் முறை:
ஒரு பலகையில் மஞ்சள் பூசி, அதன் மீது அகத்தியப் பெருமானின் திரு உருவப் படத்தை வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, மலர் சூட்டி, அதன் முன் செம்பு, பித்தளை, வெள்ளி இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஆன சொம்பில் தண்ணீர் வைத்து, பஞ்சாமிருதம், பொங்கல், இளநீர் இவற்றில் ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக வைத்து, குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி, சித்தரின் தியானச் செய்யுளை மனமுருக சொல்ல வேண்டும்.

- Advertisement -

அகத்திய முனிவரை பூஜிப்பதால் கிடைக்கப் பெறும் பலன்கள்:
கல்வித்தடை நீங்கும், இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும், பூர்வீக சொத்துக்கள் வந்தடையும், பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும், பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும், முன்வினை பாவங்கள் அகலும், புதன் பகவானால் உண்டான தோஷங்கள் தீரும், சகலவிதமான நோய்களும் தீரும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

agathiyar

மார்கழி மாதம், ஆயிலயம் நட்சத்திரத்தில் பிறந்த அகத்தியர், சிவபெருமானிடமிருந்து தமிழ் கற்றவர் என்ற சிறப்புக்கு உரித்தானவர். விதர்ப நாட்டு மன்னனின் மகளான லோபமுத்திரையை மணமுடித்த இவருக்கு இத்மலாகன் என்ற மகன் ஒருவர் உள்ளார். நான்கு யுகம் 48 நாட்கள் வாழ்ந்ததாக கூறப்படும் இவர் ஜீவ சமாதி அடைந்தது திருவனந்தபுரம் என்றும், கும்பகோணம் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

- Advertisement -

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த சமயத்தில் அந்த திருமணத்தை காண அனைவரும் வடதிசை நோக்கி புறப்பட்டதால், தென்திசை மேல் நோக்கி நின்றது. இந்த நிலையை சரிசெய்ய, சிவபெருமானால் தென்திசை நோக்கி அனுப்பப்பட்டவர் அகத்தியராவார். தென்திசை நோக்கி வரும்பொழுது அகத்தியர் கொண்டுவந்து நீரே இன்று காவிரி ஆறாக மாறியுள்ளது. முதல் தமிழ் இலக்கியமான அகத்தியம் எனும் நூலை எழுதிய சிறப்பும் அகத்தியருக்கு உள்ளது. ஆனால் இந்நூல் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

agathiyar

இலக்கணம், இலக்கியம், இசை, கூத்து, மருத்துவம், உளவியல், ஜோதிடம் இப்படி பல்வேறு துறைகளில் வல்லுனராக இருந்துள்ள அகத்தியர், பல்வேறு நூல்களையும் இயற்றியுள்ளார். அப்படி அவர் எழுதிய நூல்களில் சில

அகத்தியர் இயற்றிய நூல்கள்:
1. அகத்தியர் வெண்பா, அகத்தியர் வைத்தியக் கொம்பி, அகத்தியர் வைத்திய ரத்னாகரம், அகத்தியர் வைத்தியக் கண்ணாடி, அகத்தியர் வைத்தியம் 1500, அகத்தியர் வைத்திய சிந்தாமணி, அகத்தியர் கர்ப்ப சூத்திரம், அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம், அகத்தியர் வைத்தியம் 4600, அகத்தியர் செந்தூரம் 300, அகத்தியர் மணி 4000, அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு, அகத்தியர் பஸ்பம் 200, அகத்தியர் நாடி சாஸ்திரம், அகத்தியர் பக்ஷணி, அகத்தியர் கரிசில் பஸ்யம், சிவசாலம், சக்தி சாலம், சண்முக சாலம், ஆறெழுத்தந்தாதி, காம வியாபகம், விதி நூன் மூவகை காண்டம், அகத்தியர் பூசாவிதி. அகத்தியர் சூத்திரம் 30.

Agathiyar

இன்றைய அறிவியலே அண்ணாந்து பார்க்கு அளவிற்கு பல்வேறு தகவல்கள் அகத்தியர் எழுதிய நூல்களில் உள்ளன. உதாரணமாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மின்சாரத்தை தாயாருக்கு தொல்நூட்பம் குறித்த தகவல்கள் அவர் எழுதிய நூலில் இடம்பெற்றுள்ளது. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அகத்தீச பெருமானை போற்றி வழிபட்டு அவருடைய ஆசியை பெறுவோம்.

- Advertisement -