- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபஞ்சம் தீர்க்கும் ஐப்பசி பௌர்ணமி பரிகாரம்

பஞ்சம் தீர்க்கும் ஐப்பசி பௌர்ணமி பரிகாரம்

- Advertisement -

உலகத்திற்கே சோறு போடுகின்ற சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறக்கூடிய நாள் ஐப்பசி பௌர்ணமி. ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். இதற்கு என்ன அர்த்தம். சோறு எந்த இடத்தில் கிடைக்கிறதோ, எந்த இடத்தில் நம்முடைய பசியை ஆற்றிக் கொள்ள முடிகிறதோ, அந்த இடம் தான் நமக்கு சொர்க்கமாக இருக்கும். இது ஒரு அர்த்தம்.

இன்று சிவபெருமானின் மீது விழும் ஒவ்வொரு அரிசி பருக்கையும், ஒவ்வொரு சோறும் சிவபெருமானாக மாறுகிறது. ஒரு ஈசனை பார்த்தாலே புண்ணியம். ஒரு லட்சம் சாதங்கள் ஒன்றாக சேர்த்து, சிவபெருமானின் மீது அபிஷேகம் செய்யும்போது, அந்த ஒவ்வொரு அரிசி பருக்கையும் சிவபெருமானாக மாறி நிற்கின்றது. ஆக லட்ச ஈசனை தரிசனம் செய்தால், நமக்கு சொர்க்கம் தானே. சோறு கொண்ட இடம் சொர்க்கம் என்பதற்கு இப்படியும் ஒரு அர்த்தத்தை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

ஐப்பசி பௌர்ணமி பரிகாரம் 2024

இவ்வளவு அற்புதங்களை கொண்ட இந்த ஐப்பசி பௌர்ணமி நாளில், நம்முடைய வீட்டில், நம் கையால் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளைய தினம் ஐப்பசி பௌர்ணமி. நாளை மாலை நிலவு உதயமானதற்கு பின்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் அரிசி அளப்பதற்கு ஆழாக்கு, ஒழக்கு, அரைபடி, படி என்று ஏதாவது கட்டாயம் வைத்திருப்பீர்கள். டம்ளரின் அரிசியை அளக்கக்கூடாது. இப்படி சின்னதாக படி வாங்கி வைத்து தான் அரிசியை அளக்க வேண்டும். அதுதான் வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை கொடுக்கும்.

- Advertisement -

அந்த ஆழாக்கிலோ அல்லது படியிலோ நிரம்ப பச்சரிசி வைத்து விடுங்கள், அதன் மேலே 1 ரூபாய் நாணயத்தையும் வைத்து விடுங்கள். இதை மொட்டை மாடியில் வைக்கலாம், அல்லது பால்கெனியில் வைக்கலாம். நிலவொளி எந்த இடத்தில் வருமோ, அந்த இடத்தில் வைத்துவிட்டு, அந்த ஈசனையும் சந்திர பகவானையும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும், எந்த ஜென்மத்திலும் பணத்திற்கோ, சாப்பாட்டிற்கோ பஞ்சம் வரக்கூடாது என்று மனநிறைவோடு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கொஞ்ச நேரம் இந்த அரிசியும் அந்த நாணயமும் நிலா வெளிச்சத்திலேயே இருக்கட்டும். நீங்களும் அந்த வெட்ட வெளிலையே இருக்கலாம் நிலவு ஒளி உங்கள் மீது படுவது ரொம்ப ரொம்ப நல்லது. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் எவ்வளவு நேரம் இருந்தாலும் தவறு கிடையாது.

- Advertisement -

இப்படி வைப்பதற்கு வாய்ப்பு இருந்தால் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிலவு வெளிச்சத்தில் வைத்த அந்த பச்சரிசியை எடுத்து வந்து கொஞ்சம் அரிசியை எடுத்து உங்கள் வீட்டு அரிசி மூட்டையில் கலந்து விட வேண்டும். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் வீட்டில் பணத்திற்கும் பஞ்சம் வராது, சாப்பாட்டிற்கும் பஞ்சம் வராது என்பது நம்பிக்கை.

அந்த படியில் வைத்த மீதம் அரிசி இருக்கும் அல்லவா. அந்த பச்சரிசியில் ஏதாவது சாதம் சமைத்து அடுத்த நாளோ அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதோ, அந்த சாதத்தை பசியோடு இருக்கும் இரண்டு பேருக்கு அன்னதானம் செய்து விட வேண்டும். அன்ன அபிஷேகத்திற்கு, சிவபெருமானுக்கு நாம் ஏதாவது ஒரு கைங்கரியம் செய்ய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள், அன்னதானம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: 15-11-2024 கடன் தீர பரிகாரம்

மக்களுக்கு செய்யும் சேவை தான் அந்த மகேசனுக்கு செய்யும் சேவை என்று சொல்லுவார்கள். இல்லாதவர்களுக்கு சாப்பாட்டை நீங்கள் போடுங்கள். உங்களுக்கான சாப்பாட்டை அந்த ஈசன் நிச்சயம் கொடுப்பான். இந்த எளிமையான பரிகாரம் அனைவருக்கும் நிச்சயம் பயனுள்ளபடி அமையும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்