Airtel Digital TV அதிரடி விலைகுறைப்பு. Tata sky ஈடுகொடுக்குமா ?

Airtel
- Advertisement -

தற்போது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஸ்மார்ட் டிவிகளை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் நவீன மாற்றம் மற்றும் மக்களின் அன்றாடத் தேவை முன்பை விட தற்போது நவீன மயமாகியுள்ளது. அதனால் இந்தியர்கள் பலரும் தற்போது சாதாரண டிவி மற்றும் கேபிள் கனெக்ஷனை தவிர்த்து ஸ்மார்ட் டிவி மற்றும் DTH சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில் ஸ்மார்ட் டிவி டிடிஎச் இணைப்பின் மூலம் அதி துல்லியமான படத்தை காண முடியும். எனவே தற்போது டிடிஎச் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

airtel 2

தற்போது வரை இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டிடிஎச் என்றால் அது டாடா ஸ்கை தான். அதனை தற்போது ஏர்டெல் டிடிஎச் முந்தி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் ஏர்டெல் டிடிஎச் இருந்தாலும் அதன் வாடிக்கையாளர்கள் சற்று குறைவாகவே இருந்து வருகின்றனர். தற்போது வாடிக்கையாளர்களை ஈர்க்க ஏர்டெல் டிடிஎச் அதிரடி விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது டாட்டா ஸ்கை மற்றும் ஏர்டெல் டிடிஎச் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வேறுபாட்டை இந்த பதிவில் காணலாம் வாருங்கள்

- Advertisement -

ஏர்டெல் HD புதிய இணைப்பு : 1300 ரூபாய் (இந்திய மதிப்பில்)

டாடா ஸ்கை HD புதிய இணைப்பு : 1499 ரூபாய் (இந்திய மதிப்பில்)

- Advertisement -

ஏர்டெல் SD புதிய இணைப்பு : 1100 ரூபாய் (இந்திய மதிப்பில்)

டாடா ஸ்கை SD புதிய இணைப்பு : 1399 ரூபாய் (இந்திய மதிப்பில்)

- Advertisement -

இந்த விலைப்பட்டியல் நிலவரப்படி டாடா ஸ்கை இணைப்பை விட ஏர்டெல் HD இணைப்பு 199 ரூபாய் குறைவாகவும், SD இணைப்பு 299 ரூபாய் குறைவாகவும் இருப்பதால் இனி ஏர்டெல் நிறுவனம் தங்கள் புதிய வாடிக்கையாளர்களை அதிக அளவு கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Airtel DTH

ஆண்ட்ராய்ட் டிவியை அடிப்படையாகக்கொண்ட செட்டாப் பாக்ஸ் முதன் முதலில் டிஷ்டிவி அறிமுகப்படுத்தியது. அதன் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இருந்தாலும் அதனை டாடா ஸ்கை நிறுவனம் முந்தி முதலிடத்தை அடைந்தது. அதன்பிறகு டாடாஸ்கை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம் ஆனாலும் தற்போது இந்த ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் விலை குறைப்பு காரணமாக தற்போது ஏர்டெல் நிறுவனம் டாட்டா ஸ்கை மிஞ்சும் அளவிற்கு பயனாளர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Airtel DTH

மேலே குறிப்பிட்டுள்ள விலைகளில் இன்ஸ்டாலேஷன் கட்டணம் உள்ளதா இல்லையா என்பது பற்றி தெளிவான அதிகாரபூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனவே இணைப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அறிய அருகிலுள்ள டிடிஎச் ஆப்ரேட்டர்களை அணுகி சரி பார்த்துக் கொள்ளும் படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

- Advertisement -