Bharti Airtel : சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்று கம்பெனியை நடத்தும் ஏர்டெல் – விவரம் இதோ

Airtel
- Advertisement -

இந்தியாவின் டாப் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தற்போது அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. இப்போது தன் செல்போன் டவர்களை நிர்வகித்து வரும் பார்தி இன்ஃப்ராடெல் நிறுவன பங்குகளை விற்று ஏர்டெல் டெலிகாம் நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான காசை திரட்ட இருக்கிறது. அந்த அளவிற்கு ஏர்டெல் நிறுவனம் சரிவினை சந்திக்க ஆரம்பித்துள்ளது.

airtel 1

தற்போது பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தில் 53.53 சதவிகித பங்குகளை மட்டுமே ஏர்டெல் வைத்திருக்கிறது. அதில் சுமார் 32 சதவிகித பங்குகளை நெட்டில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்கிற நிறுவனத்திடம் விற்க இருக்கிறது.
இன்ஃப்ராடெல் ஏர்டெல் நிறுவனத்தின் டவர்களை பேணி வருகிறது. அதில் இருந்து தற்போது பங்குகளை விற்க முன்வந்துள்ளது. அவ்வாறு விற்கும் பங்குகளை அந்நிறுவனம் மேற்படி நிர்வாகத்தினை தொடர பயன்படுத்த உள்ளததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

இப்படி பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் பங்குகளை நெட்டில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் ஒரு பங்குக்கு 363 ரூபாய் என விற்று பணம் திரட்ட இருக்கிறார்கள். சுமார் 525 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏர்டெல் நிறுவன பங்குகளையும் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன் என்கிற நிறுவனத்துக்கு விற்க இருக்கிறார்கள். ஆண்டுக்கு 10000 கோடி ரூபாய் லாபத்தை பார்த்து வந்த ஏர்டெல் நிறுவனம் தற்போது நிறுவனத்தை நடத்த கூட கஷ்டப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

airtel 2

2016 ஆம் ஆண்டு ஜியோ நிறுவனம் டெலி சர்வீஸ் சேவைகளை செய்ய ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே ஏர்டெல் நிறுவனம் பெரும் சரிவினை சந்திக்க ஆரம்பித்தது. அதன்காரணமாக ஏர்டெல் நிறுவனம் தற்போது பெரும் கடன் சுமையில் உள்ளது. ஜியோ நிறுவனம் சரிவினை சந்தித்தாலும் வாடிக்கையாளர்களை அதிக அளவு தன்வசம் வைத்துள்ளது. இதனால் ஜியோவிற்கு நன்மையே

- Advertisement -