வயிற்று வலி, அஜீரண கோளாறு சரியாக இந்த இஞ்சி மற்றும் புதினா சட்னியை இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடுங்கள்

inji-thuvayal
- Advertisement -

இஞ்சி சட்னி ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற சட்னி வகை. இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது இஞ்சி மற்றும் புதினா சட்னி அஜீரண கோளாறு, வயிற்று வலி, போன்றவற்றிற்கு ஏற்றதாகும். இவை சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும்.  இஞ்சி சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிடும் போது வயிற்றில் ஏற்படும் அஜீரண கோளாறு, வாயு பிரச்சனையை சரி செய்கிறது. வாருங்கள் இந்த சுலபமான இஞ்சி மற்றும் புதினா சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
நறுக்கிய இஞ்சி – 1/2 கப், கடலை பருப்பு – 2 ஸ்பூன், வரமிளகாய் – 5, கறிவேப்பிலை – ஒரு குத்து, புளி – ஒரு சிறிய கோலி குண்டு அளவு, பொடித்த வெல்லம் – 1/2 ஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – 1ஸ்பூன்,
கடுகு – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும் பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் கடலை பருப்பு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

ஊற வைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய இஞ்சி கடலைப்பருப்பு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து மறைத்து வைத்துக் கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் கடுகு கருவேப்பிலை தாளித்து அதனை சட்னியுடன் சேர்க்கவும். சுவையான இஞ்சி சட்னி தயாராகிவிடும்.

- Advertisement -

புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 10, தக்காளிப் பழம் – 1, சிவப்பு மிளகாய் – 6, சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

புதினா சட்னி செய்முறை:
ஒரு கட்டு புதினாவை ஆய்ந்து இலைகளை தனியே அடுத்து  அலசி வைக்கவும், சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்,  தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும். அதனுடன்  பிரஷ்ஷான புதினா இலைகள் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஆற வைக்கவும். பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும் .
பின்னர் ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்த கலவையை சட்னியுடன் கலந்து சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.

- Advertisement -