இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது! நம்முடைய வீட்டையும், நம்மையும் எந்த ஒரு தோஷமும் தாக்காமல் இருக்க, இதை மட்டும் செய்தாலே போதும்.

akni-nakshthram
- Advertisement -

சித்திரை மாதத்தில் வரக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது. 4 – 6 – 2021 செவ்வாய்க்கிழமை இன்று சித்திரை 21ஆம் நாள் அக்னி நட்சத்திரம் ஆரம்பம். 29 – 5 – 2021 சனிக்கிழமை வைகாசி 15ம் தேதி வரை இந்த அக்னி நட்சத்திரம் தொடரும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் வரக்கூடிய நாட்களில் சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக நம்முடைய பூமியை தாக்கும். இதன் மூலம் ஏற்படக்கூடிய தோஷங்கள், உஷ்ணம், நோய்த் தொற்று இவைகள் நம்மை தாக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக சுலபமான முறையில் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றிய ஒரு சிறிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sun1

வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய உஷ்ணம் என்பது இந்த பூமியில் வாழக்கூடிய மனிதர்களுக்கு மட்டும் அல்ல. மரம் செடி கொடி புழு பூச்சிகளிலிருந்து, அந்த ஆண்டவன் வரை இந்த அக்கினி நட்சத்திர காலத்தை, உஷ்ண காலத்தை கடந்து சென்றுதான் ஆகவேண்டும். இந்த வெயிலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை தணிப்பதற்கு உங்களால் இயன்ற அளவு தண்ணீரை தாகமாக இருக்கக்கூடிய பறவைகள் விலங்குகள் இவைகளுக்கு வைப்பது நமக்கு பல கோடி புண்ணியத்தை கொடுக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டு வாசலில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி வையுங்கள். இதேபோல் சிறிய கப்பில் கொஞ்சமாக தண்ணீரை நிரப்பி உங்களுடைய மொட்டைமாடியில் ஆங்காங்கே ஒன்றிரண்டு வையுங்கள். தவறே கிடையாது. தாகத்திற்கு தவித்துக் கொண்டிருக்கும் ஒரு பறவை உங்கள் வீட்டில் வந்து தண்ணீரை பருகினாலும் அந்தப் பறவை உங்கள் பரம்பரையையையே வாழ்த்தி விட்டு செல்லும்.

watering-rose-plant

உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் செடி கொடிகளுக்கு உங்களால் முடிந்த அளவு தண்ணீரை ஊற்றி வாருங்கள். இதேபோல் நீங்களும் தினம்தோறும் அதிகப்படியான தண்ணீரை பருக வேண்டும். அது உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சரி, வீட்டில் தோஷம் தாக்காமல் இருக்க பூஜை அறையில் இருக்கக்கூடிய தெய்வங்களின் உஷ்ணத்தை தணிக்க ஆன்மீக ரீதியாக என்ன செய்வது? ஒரு சிறிய குடம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முழுமையாக தண்ணீரை நிரப்பி விடுங்கள். அந்தத் தண்ணீரில் கொஞ்சமாக மஞ்சள் தூளை போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் வேப்பிலைகளை உருவி போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் ஒரு குடம் தண்ணீரை இப்படி தயார் செய்து அக்னி நட்சத்திர காலம் முடியும் வரை, காலையில் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, அதை அப்படியே விட்டு விட வேண்டும். மறுநாள் காலை எழுந்தவுடன் அந்தக் குடத்தில் இருக்கும் தண்ணீரை கொண்டு போய் உங்கள் நிலை வாசல் தெளித்து கோலம் இட வேண்டும்.

மீண்டும் அந்தக் குடத்தில் இதேபோல் தண்ணீரை நிரப்பி பூஜை அறையில் வைத்து அக்னி நட்சத்திரம் வரும் வரை இதே போல் பின்பற்றி வந்தால், உங்களுடைய வீட்டை எந்த தோஷமும் தாக்காது. உஷ்ண காலத்தில் வரக்கூடிய நோய் தொற்றுக்கள் உங்கள் வீட்டிற்குள் எளிதில் நுழைந்து. உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -