குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் செய்யும் முறை

“அக்ஷராப்பியாசம்” என்பதற்கு தமிழில் “எழுத்தறிவித்தல்” என்று பொருள் கொள்ளலாம். அதாவது பிறந்து 2 வயதிற்கு மேலான குழந்தைகள் முறையான பள்ளி கல்வி கற்பதற்கு முன்பு செய்யப்படும் ஒரு சடங்காகும். இதை “வித்யாரம்பம்” என்றும் கூறுவர். இந்து மதத்தவர்கள் செய்ய வேண்டிய 16 வகையான முக்கியமான சம்ஸ்காரம் எனப்படும் சடங்குகளில் இந்த அக்ஷராப்பியாசம் சடங்கும் ஒன்று. பொதுவாக இந்த அக்ஷராப்பியாசம் சடங்கு கோயில்களில் விநாயகர், சரஸ்வதி தேவி தெய்வங்களை பூஜித்து வேதமறிந்த அந்தணர்கள் கொண்டு செய்ய படுகின்றன. இந்த அக்ஷராப்பியாசம் சடங்கு எப்படி செய்வது என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

உங்களின் குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் சடங்கு செய்ய நவராத்திரி காலத்தில் வரும் “விஜயதசமி அல்லது சரஸ்வதி பூஜை” தினங்களே மிகவும் சிறப்பானது. வசந்த பஞ்சமி, தமிழ் புத்தாண்டு, குரு பூர்ணிமா, ஆவணி பௌர்ணமி ஆகிய தினங்களும் அக்ஷராப்பியாசம் செய்வதற்கு சிறந்த தினங்களாகும். இக்காலங்களில் கோயில்களில் தங்களின் குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் சடங்கை செய்வதற்கு பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளோடு வருவார்கள். எனவே கோயில்களில் இப்பூஜை சடங்கை செய்வதற்கு முன்பதிவு செய்வது அவசியமாகிறது.

அக்ஷராப்பியாசம் செய்யும் தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து உங்கள் குழந்தையை நீராட செய்து, புத்தாடை உடுத்த செய்ய வேண்டும். பூஜைக்கு தேவையான மஞ்சள், குங்குமம், தேங்காய், சந்தனம், பத்திகள், கற்பூரம், மலர்கள், மலர்மாலை, 1 கிலோ அரிசி, வெற்றிலை, பாக்கு, நைவேதியத்திற்காக சர்க்கரை பொங்கல் அல்லது பாயசம், குழந்தை எழுதுவதற்கான பலகை, பல்பம், நோட்டு புத்தகம், பேனா போன்றவற்றை தயார் செய்து கோயிலுக்கு பூஜை ஆரம்பிக்கும் நல்ல நேரம் தொடங்குவதற்கு முன்பாக முடிந்த அளவு சீக்கிரமாக செல்வது நல்லது.

Vinayagar

கோயிலுக்கு சென்று அக்ஷரபாஷ்யம் சடங்கு மேற்கொள்ளும் இடத்தில் நீங்கள், உங்கள் குழந்தை மற்றும் உறவினர்கள் சென்று அமர்ந்து கொள்ளவேண்டும். இச்சடங்கின் போது பல மக்கள் வருவதால் சடங்கை நடத்தும் வேதவிற்பன்னர் ஒலிபெருக்கி மூலம் அனைவருக்கும் பூஜை செய்யும் முறை பற்றி நிலையே இருக்கும் என்பதால், அவர் கூறுவதை கவனமாக கேட்டு அதன் படி இச்சடங்கை செய்ய வேண்டும்.

- Advertisement -

பூஜை முடிந்ததும் மேடையில் அமர்ந்திருக்கும் வேதியரிடம் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளோடு, எழுதும் பலகையில் கொஞ்சம் அரிசியை போட்டு பரப்பி, அவரிடம் கொடுக்க அவர் ஒவ்வொரு குழந்தையின் காதில் சரஸ்வதி மற்றும் பிரணவ மந்திரம் ஓதி, அக்குழந்தைகளின் கையை பிடித்து அரசி நிறைந்திருக்கும் பலகையில் “ஓம்” என்கிற எழுத்தை எழுத வைத்து ஆசிர்வதித்து அனுப்புவார். இதன் பின்பு கோயிலில் இருக்கும் இறைவனை வணங்கி, உங்களுக்கு விருப்பமிருக்கும் பட்சத்தில் வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்கு எழுதும் பலகை, நோட்டு புத்தகம், பேனா, இனிப்புகள் போன்றவற்றை தானமளிப்பது சிறந்த பலன்களை தரும்.

அக்ஷராப்பியாசம் அல்லது வித்யாரம்பம் சடங்கை குழந்தைகளுக்கு செய்வதால் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியின் அருள் குழந்தைகளுக்கு கிடைக்க பெற்று, அவர்கள் கல்வி மற்றும் கலைகளில் சிறந்தவர்களாக பரிணமிக்க செய்கிறது. விநாயக பெருமானின் அருளால் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த கல்வி மற்றும் செல்வம் பெற்று வாழ்வில் மேன்மையடைகின்றனர்.

இதையும் படிக்கலாமே:
ரிஷப விரதம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aksharabhyasam procedure in Tamil. It is also called as Aksharabhyasam in Tamil or Vidyarambham pooja vidhi in Tamil or Saraswathi poojai in Tamil or Saraswathi vidhyarambam in Tamil.