நாளை வரக்கூடிய அட்சய திதி அன்று இதை மட்டும் செய்தால் போதும். நமக்கு அடுத்து வரக்கூடிய பல தலைமுறைகள் பஞ்சம் இல்லாமல், செல்வ செழிப்போடு வாழும்.

akshaya-thrithiyai

நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து, அட்சய திருதியையும் வருகின்றது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நன்நாளினை யாரும் தவற விடாதீர்கள். அக்ஷயம் என்றாலே மேலும் மேலும் பல மடங்கு பெருகும் என்பதற்கான அர்த்தத்தை குறிக்கின்றது. அக்ஷய பாத்திரத்தில் நாம் எதை எடுத்தாலும், அது அல்ல அல்ல சுரந்துகொண்டே இருக்குமாம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அக்ஷய பாத்திரம் கூட, எடுக்க எடுக்க தான் சுரக்கின்றது. இதேபோல் தான் நம் கையில் இருக்கும் செல்வமும் அள்ள அள்ள குறையாமல் சுரந்துகொண்டே இருக்க வேண்டும் என்றால், அதை நாம் அப்படியே பூட்டி வைக்கக் கூடாது. எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். செல்வ வளம் அதிகரிக்க, செல்வத்தை நம் கைகளால், எடுத்து, கொடுத்துப் பழக வேண்டும். ‘இறைக்கிற கிணறுதான் சுரக்கும் என்பது நம்முடைய முன்னோர்களின் கூற்று’. இதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த பதிவினை தொடர்வோம்.

akshaya

உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் அப்படியே வைத்துக் கொண்டால், அது அப்படியே தான் இருக்குமே தவிர, அந்த செல்வ வளம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. சரி, இந்த அக்ஷய திருதியை நன்னாளை, குறிப்பாக நாம் இப்போது இருக்கின்ற லாக்டவுன் சூழலில் எப்படி வழிபாடு செய்வது, எந்த நேரத்தில் நம்முடைய வீட்டில் பூஜை செய்தால் நமக்கு லட்சுமி கடாட்சம் பெருகும், இந்த அட்சய திருதியை நன்னாளில் கட்டாயம் எல்லோரும் செய்ய வேண்டிய அந்த ஒரு விஷயம் என்ன, என்பதைப் பற்றிய சில தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நாளை வெள்ளிக்கிழமை என்பதால் உங்களுடைய வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜைக்கு, பூஜை அறையை எப்படி தயார் செய்வீர்களோ, அதே போல் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பூஜை அறையில் உள்ள தெய்வங்களின் திருவுருவப் படத்திற்கு முடிந்தால் வெள்ளைநிற வாசனை நிறைந்த மல்லி பூவை கொண்டு அலங்காரம் செய்யலாம். இறைவனுக்கு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பாயாசம், கற்கண்டு சாதம், அவல் கேசரி போன்ற பொருட்களை நிவேதனமாக வைக்கலாம்.

poojai

நாளை காலை 5.00 மணி முதல் 10.25 குள் உங்கள் வீட்டில் இந்த அக்ஷய திருதியை பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அப்படி காலையில் பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 6.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் உங்களுடைய வீட்டில் இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த அக்ஷய திருதியை அன்று ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் கொஞ்சம் மஞ்சள், குங்குமம், கல் உப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி இந்த 5 பொருட்களை வைத்து உங்கள் வீட்டில் என்றுமே தன தனித்திருக்க பஞ்சம் வரக்கூடாது.

- Advertisement -

வீட்டில் பண கஷ்டம் இருக்கக்கூடாது, கடன் பிரச்சனையில் இருந்து சீக்கிரமே வெளிவர வேண்டும், என்று அந்த ஆண்டவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இவையெல்லாவற்றையும் விட இன்றைய சூழ்நிலையில் நமக்கு தேவை ஆரோக்கியம். நமக்கு மட்டுமல்ல, இந்த உலகமே கொடிய நோய்த் தொற்றில் இருந்து வெளிவர வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று மனமுருகி அனைவரும் அந்த ஆண்டவனை இந்த நன்னாளில் பிரார்த்தனை செய்து கொள்வோம்.

poojai arai

நாளை அட்சய திருதியை அன்று கட்டாயம் நாம் எல்லோரும் செய்ய வேண்டிய ஒரு விஷயம் இதுதான், ‘தானம்’. இந்த தானத்திற்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. உங்களிடம் இருக்கும் வசதிக்கு ஏற்ப, உங்களால் இயன்ற அளவு, இயலாதவர்களுக்கு தானம் கொடுப்பது பல கோடி புண்ணியத்தை சேர்க்கும். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் பரம்பரைக்கு இது புண்ணியத்தை தேடித்தரும் என்று சொன்னால் அது மிகையாகாது.

dhanam

ஆனால் நாம் யாருமே இன்றைக்கு தானம் செய்யக் கூடிய சூழ்நிலையில் இல்லை.‌ தானம் பெறுபவர்களும் அதை வாங்கிக்கொள்ள சூழ்நிலையில் இல்லை. காரணம் கொடிய நோய் தொற்று. என்ன தான் செய்வது? இன்றைய சூழ்நிலையில் நோய் தொற்றால் சிகிச்சைக்கு செலவழிப்பதற்கு கூட பணம் இல்லாமல், கஷ்டப்பட்டு வரும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. அந்த குடும்பங்களுக்கு உங்களால் இயன்ற அளவு உதவி செய்யுங்கள். உதவி செய்யும் போது, உதவி செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

annathanam

எத்தனையோ முதியோர் இல்லங்கள், எத்தனையோ ஆசிரமங்கள் இந்த லாக்டவுன் காலத்தில் எந்த வசதியையும் பெறமுடியாமல், கஷ்டப்பட்டு வருகிறது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்துகொள்ள முடியாமல் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட இடங்களுக்கு உங்களால் இயன்ற அளவு, பண உதவியைச் செய்யலாம். அப்படி இல்லையென்றால் உங்களால் என்ன உதவியை, செய்ய முடியுமோ அதை, நாளைய தினத்தில் செய்யும் பட்சத்தில், அந்த புண்ணியம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் பரம்பரைக்கே தொடர்ந்து வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.