அட்சய திருதியை அன்று நாம் செய்யும் ஒரு சில காரியங்கள், வாழ்நாள் முழுவதும் நம்மை வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் தான் வைத்திருக்கும். அந்த வகையில் இந்த அட்சய திருதியை அன்று, நாளை 30-04-2025, உங்கள் ராசி படி பின் சொல்லக்கூடிய இந்த பொருட்களை ஒருவருக்கேனும் உங்கள் கையால் தானம் கொடுத்து விட்டால் போதும். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றம் அசுர வேகத்தில் இருக்கும்.
பிறகு, வாழ்க்கையில் நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவி செய்யக்கூடிய இடத்தில் தான் இருப்பீர்களே தவிர, அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைமை ஒருபோதும் உங்களுக்கும் வராது. நாளைய தினம் புதுசாக ஒரு உண்டியல் அல்லது பர்ஸ் அல்லது பணம் வைக்கும் பெட்டி, ஏதாவது ஒன்று புதுசாக வாங்கி அதில் வாசனை நிறைந்த, பணம் ஈர்க்கும் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, இதுபோல பொருட்களை போட்டு 11 ரூபாயை அந்த பணம் சேர்க்கும் பெட்டியில் வைத்து, பணத்தை சேர்க்க துவங்கி பாருங்கள்.
மேலும் மேலும் உங்களுடைய வீட்டில் நிறைய பணம் சேரும். இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவிற்குள் பயணம் செய்வோம். இப்போது 12 ராசிக்காரர்களும் அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் நாளைய தினம் துவரம் பருப்பு தானம் செய்வது சிறப்பு. சாம்பார் சாதமாக தானம் செய்ய முடியும் என்றாலும் மூன்று பேருக்கு சாம்பார் சாதம் வாங்கி உங்கள் கையால் தானம் கொடுங்கள். செம்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்கினால், உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். சமையலறைக்கு பூஜை அறைக்கு தேவையான செம்பு பாத்திரத்தை வாங்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள், நாளைய தினம் கடையிலிருந்து சின்ன சின்ன டப்பா பால்கோவா வாங்கி ஏழை எளியவர்களுக்கு, குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கலாம். உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் பொருந்திய நெய் வாங்கி வந்தால், உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். ஒரு கிலோ அரிசி, வாங்கி ஒரு ஏழைக்கு தானமாக கொடுத்தால் கூட உங்களுடைய வாழ்வில் இருக்கும் பண கஷ்டங்கள் தீரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பாசிப்பருப்பு, வரக்கொத்தமல்லி இதுபோல பொருட்களை வாங்கி ஒரு ஏழைக்கு தானமாக கொடுக்கலாம். கீரை சாதம், புதினா சாதம் இது போல உணவு பொருட்களை வாங்கி தானம் கொடுத்தாலும் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். உங்களுடைய வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு அல்லது உங்களுடைய குழந்தைக்கு புது ஆடை வாங்கி கொடுங்கள். மனைவிக்கும் பட்டுப்புடவை எடுத்து கொடுக்கலாம் லட்சுமி கடாட்சம் பெருகும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் நாளைய தினம் நீர் மோர் தானமாக கொடுக்கலாம். வீட்டிற்கு வெள்ளை நிறத்தில் இருக்கும் மல்லிகைப்பூ கல் உப்பு இதுபோல பொருட்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். அனாதை ஆசிரமங்களுக்கு குழந்தைகள் தங்கி இருக்கும் ஆசிரமங்களுக்கு உங்கள் கையால் முடிந்தால், பசும்பால் வாங்கி தானம் கொடுத்து பாருங்கள். இந்த வருடம் முழுவதும் பெரிய அளவில் வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் நாளைய தினம் நான்கு பேர் வயிறு குளிரும் அளவிற்கு பழங்கள் வாங்கி தானம் செய்யலாம். குளிர்ச்சி தரும் நுங்கு, தர்பூசணி, முலாம்பழம், இது போல பழங்களை வாங்கி தானம் கொடுப்பது சிறப்பு. குறைந்தது இரண்டு பேருக்கு வாங்கி கொடுத்தால் கூட போதும் உங்களுடைய வீட்டிற்கு நாளை கோதுமையை வாங்கி வந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நாளைய தினம் ட்ரை ஃப்ரூட்ஸ் வாங்கி தானம் கொடுக்கலாம். முந்திரி, திராட்சை, பேரிச்சம்பழம், இதுபோல பொருட்களை வீட்டிற்கு வாங்கி வந்தாலும் நல்ல பலன் தான். இது கொஞ்சம் விலை அதிகம் என்று நீங்கள் சிந்தித்தால் மிளகு பொங்கலை யாருக்கேனும் மூன்று பேருக்கு வாங்கி தானம் கொடுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தக்காளி சாதம் தானம் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, இதுபோல பருப்பு வகைகளோடு ஒரு கிலோ அரிசியில் வைத்து, ஒரு ஏழைக்கு தானம் கொடுக்கலாம். நாளைய தினம் உங்கள் வீட்டிற்கு வெள்ளை நிற சர்க்கரையை அல்லது டைமண்ட் கற்கண்டுகளை வாங்குவது சுபிட்சத்தை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் நாளைய தினம் பழச்சாறு, கரும்புச்சாறு, நீர் மோர் பானகம் வெள்ளரிக்காய், தர்பூசணி இதுபோல குளிர்ந்த உணவுகளை வாங்கி ஏழை எளியவர்களுக்கு வீதியில், வெயிலில் கடை வைத்து கஷ்டப்படுபவர்களுக்கு தானம் கொடுத்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை அமோகமாக மாறிவிடும். மல்லிகைப்பூ வாங்கி வீட்டில் இருக்கும் பெண்கள் கையில் கொடுங்கள் வீட்டிற்கு சுபிட்சம் உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நாளைய தினம் வாழைப்பழம், வெல்லம், பச்சரிசி இது போன்ற பொருட்களை வாங்கி யாருக்கேனும் ஒரு ஏழைக்கு தானம் கொடுக்கலாம். முடிந்தால் சர்க்கரை பொங்கல் செய்து பசு மாட்டிற்கு கொடுப்பது உங்களுக்கான லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். உங்களுடைய வீட்டிற்கு தேவையான மல்லிகை பொருட்களை நாளை வாங்குங்கள் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் வேர்க்கடலை சேர்த்த சாதத்தை நாளைய தினம் உங்கள் கையால் தானம் கொடுப்பது சிறப்பு. வேகவைத்த வேர்க்கடலையை 10 பேருக்கு உங்கள் கையால் தானம் செய்தாலும் உங்களுக்கான பண வரவு அதிகரிக்கும். உங்களுடைய வீட்டிற்கு நாளைய தினம் கல் உப்பு வாங்கி எடுத்து வாருங்கள் நன்மை நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் நாளைய தினம் ஏழை குழந்தைகளுக்கு வயதானவர்களுக்கு இளநீர் வாங்கி உங்கள் கையால் தானம் கொடுங்கள். ஒரு வயதான தம்பதிக்கு பச்சரிசி வெல்லம் வெற்றிலை பாக்கில், உங்களால் முடிந்த தக்ஷனை வைத்து, தானம் கொடுத்தால் அமோக பலனை அடைவீர்கள். உங்களுடைய வீட்டிற்கு நாளைய தினம் வெள்ளை நிறத்தில் பசும்பால் வாங்கி வந்தாலும் போதும் நன்மை நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் நாளைய தினம் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு பச்சரிசி மஞ்சள் தூள், வெல்லம் உலுந்து, சமையல் எண்ணெய் இதுபோல பொருட்களை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு சமைப்பதற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தால் கூட ரொம்பவும் சுபிட்சம். உங்களுடைய வீட்டிற்கு நாளைய தினம் மஞ்சள் குங்குமம் வாங்கி வந்தாலே அமோகமான நன்மையை பெறுவீர்கள்.
இதையும் படிக்கலாமே: அட்சய திருதியை 2025
மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் 12 ராசிக்காரர்களுக்கும் பொதுப்படையாக சொல்லப்பட்ட ஜோதிடம் சார்ந்த குறிப்புகள் தான் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் இதன் மூலம் நிச்சயம் குடும்பத்திற்கு நல்லது நடக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.