யுகங்கள் மொத்தம் எத்தனை? அகத்தியர் விளக்கம்

agathiyar-1-1

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இப்படி நான்கு வகை யுகங்கள் இருப்பது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அகத்தியர் வாத சௌமியம் என்னும் நூலில் பதினெட்டு யுகங்கள் இருப்பதாக அகத்தியர் கூறியிருக்கிறார். வாருங்கள் அந்த பாடலை முழுமையாக கீழே பார்ப்போம்.

agathiyar

அகத்தியர் பாடல்
கேளடா புலத்தியனே மைந்தா நீயுங்
கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டுப்பா
ஆளடா வரியினுகம் ஈரேழுகோடி
அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி
வாளடா தன்மயுகம் ஈராறுகோடி
மகத்தான ராசியுகம் ஈரெட்டுகோடி
காலடா யுகமெல்லாஞ் சொல்லிவாரேன்
கனமான வீராசன் நாலைந்துதானே.
தானென்ற விண்ணதனில் ஈரெட்டுகோடி
தருவான வாய்தனக்கு யுகம்ஏழுகோடி
மானென்ற மைனயுகம் இருமூன்றுகோடி
மகத்தான மணிகள்யுகம் இருமூன்றுகோடி
பானென்ற பணியிரதம் நான்குகோடி
பதிவான விஸ்வாசன்யுகம் மூன்றுகோடி
வானென்ற வாய்தன்யுகம் ஒருகோடியாகும்
மார்க்கமுடன் திரேதாயுகந் தன்னைப்பாரே.
பாரடா திரேதாயுகம் அதனைக்கேளு
பதினேழு லக்ஷத்தொன் பதினாயிரமாம்
மேரடா கிரேதாயுகம் அதனைக்கேளு
விருபது லக்ஷத்தொன் பதினாயிரமாம்
தேரடா துவாபரயுகம் தனைக்கேளு
தீர்க்கமுடன் ஒன்பதுலக்ஷத்து ஒன்பதனாயிரமாம்
காரடா கலியுகம் வெகு கடினமைந்தா
கண்டுபார் லக்ஷத்து முப்பதினாயிரமாம்.
அகத்தியர் அருளிய பதினெட்டு யுகங்களின் விவரம் பின் வருமாறு….
வரியின் யுகம் பதின்னான்கு கோடி ஆண்டுகளும்,
அற்புதனார் யுகம் பத்து கோடி ஆண்டுகளும்,
தன்ம யுகம் பன்னிரெண்டு கோடி ஆண்டுகளும்,
ராசி யுகம் பதினாறு கோடி ஆண்டுகளும்,
சன்ய யுகம் பத்து கோடி ஆண்டுகளும்,
வீர ராசன் யுகம் இருபது கோடி ஆண்டுகளும்,
விண் யுகம் பதினாறு கோடி ஆண்டுகளும்,
வாயு யுகம் ஏழு கோடி ஆண்டுகளும்,
மைன யுகம் ஆறு கோடி ஆண்டுகளும்,
மணிகள் யுகம் ஆறு கோடி ஆண்டுகளும்,
அத்தே யுகம் பத்தொன்பது கோடி ஆண்டுகளும்,
பணியிரத யுகம் நான்கு கோடி ஆண்டுகளும்,
விஸ்வாசன யுகம் மூன்று கோடி ஆண்டுகளும்,
வாய்தன் யுகம் ஒரு கோடி ஆண்டுகளும்,
திரேதா யுகம் பதினேழு லட்சத்து ஒன்பதனாயிரம் ஆண்டுகளும்,
கிரேதா யுகம் இருபது லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளும்,
துபாபர யுகம் ஒன்பது லட்சத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளும்,
மிகவும் கடினமான யுகமான கலியுகம் ஒருலட்சத்து முப்பதாயிரம் ஆண்டுகள்.

மேலே உள்ள பாடலை கவனிதூமானால் இதுவரை நாம் தெரிந்துவைத்துள்ள நான்கு யுகங்களும் அதில் இருக்கின்றனர். அவை னாகும் தான் இறுதி யுகங்களாக அகத்தியர் குறிப்பிட்டுளளார். அதே போல ஒவ்வொரு யுகத்திற்கான கால அளவையும் அகத்தியர் தெள்ள தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே:
சித்திரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருக இவற்றை செய்ய வேண்டும்

English Overview:
Here we explained about all types of Yugam in Tamil with the help of Agathiyar paadal.