அலோ வேரா ஜெல்லை நம்முடைய வீட்டிலேயே எப்படி தயார் செய்து ஸ்டோர் செய்வது? எந்த கெமிக்கலும் கலக்காத அலோ வேரா ஜெல்!

alovera-gel
- Advertisement -

சோற்றுக்கற்றாழை என்று சொல்லக்கூடிய இந்த அலோ வேரா செடியிலிருந்து முறையாக ஜெல்லை எப்படி எடுத்து, நம்முடைய வீட்டில் ஸ்டோர் செய்து வைக்கலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கடைகளில் இந்த அலோ வேரா ஜெல் நமக்கு கிடைக்கும். ஆனால் அதில் நிச்சயமாக ஏதாவது ஒரு கெமிக்கல் கட்டாயம் கலந்துதான் இருக்கும். காரணம் நீண்ட நாட்களுக்கு கடைகளில் இருக்கும் ஜெல் கெட்டுப்போகாது. ஆனால் நம் வீட்டில் தயார் செய்யும் இந்த அலோ வேரா ஜெல்லை வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே நம்மால் பயன்படுத்த முடியும்.

alovera-gel1

சரி, சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத அலோ வேரா ஜெல்லை சுலபமாக எப்படி தயாரிப்பது. முதலில் அந்த கற்றாழை செடிகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று கிளைகளை உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீரில் அதை நன்றாகக் கழுவி விட வேண்டும். அதன் பின்பு மேலே இருக்கும் பச்சை நிற தோலை மட்டும் நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல்லை ஸ்பூனை வைத்து எடுத்தால் தனியாக வந்துவிடும்.

- Advertisement -

வெள்ளை நிற ஜெல்லை மட்டும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு சிறிய மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஜெல்லை அந்த மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்தால் அலோ வேரா ஜெல் கிடைத்திருக்கும்.

alovera-gel2

இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து அப்படியே பிரிட்ஜில் வைத்தால் பத்து நாட்கள் வரைகூட கெட்டுப்போகாது. உங்களுடைய அழகு குறிப்புக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஜெல் கடைகளில் கிடைக்கும் ஜெல் போல, கட்டியாக இருக்காது. கொஞ்சம் தண்ணீர் படத்தில் தான் இருக்கும். ஏனென்றால் இதில் எந்தவிதமான செயற்கையான பொருட்களும் சேர்க்கப்படவில்லை. இதுதாங்க கலப்படமில்லாத ஜெல் இதை பயன்படுத்துவது மிக மிக நல்லது.

- Advertisement -

சரிங்க, கடைகளில் தளதளவென ஜெல் பக்குவத்தில் இருக்கும் அலோ வேரா ஜெல்லைப் எப்படி வீட்டிலேயே தயார் செய்வது. உங்களுக்கு கடைகளில் கிடைக்கும் அலோ வேரா ஜெல் போல தேவை என்றால், அதற்கு ஜெலட்டின் பவுடர் தேவை. கடைகளில் ஜெலட்டின் பவுடர் என்று கேட்டால் கொடுப்பார்கள். இது ஜெல்லி செய்வதற்காக பயன்படுத்தும் ஒரு பவுடர்.

alovera-gel4

ஒரு சிறிய கிண்ணத்தில் ஜெலட்டின் பவுடரை 1 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக ஒரு ஸ்பூனை வைத்து அடித்து கலந்து விட்டால் கொழகொழப்பாக ஒரு கலவை நமக்கு கிடைக்கும். இதை அடுப்பில் நேராக வைக்காமல், டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்ய வேண்டும். 3 லிருந்து 5 நிமிடங்கள் வெண்ணீரில் வைத்து சூடு செய்தால் இந்த ஜெலட்டின் பவுடர் ஜெல் பதத்திற்கு வந்துவிடும்.

double-boiling

இந்த ஜெலட்டின் ஜெல்லை நன்றாக ஆற வைத்துவிடுங்கள். அதன் பின்பு நீங்கள் தயார் செய்து வைத்து இருக்கிறீர்கள் அல்லவா? அந்த அலோ வேரா ஜெல்லை இந்த ஜெலட்டின் ஜெல்லியோடு சேர்த்து நன்றாக கலந்து கொண்டால், கடைகளில் கிடைக்கும் கெட்டிப் பதத்தில் அலோ வேரா ஜெல் உங்களுக்கு கிடைத்துவிடும். இதை பிரிட்ஜில் வைத்து 15 நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -