எண்ணெய் குடிக்காத உருளைக்கிழங்கு மசாலா போண்டா எப்படி செய்வது? அதுவும் டீ கடையில் வாங்கி சாப்பிடும் அதே சுவையில்.

masala-bonda
- Advertisement -

சில டீக்கடைகளில், ஹோட்டல்களில் உருளைக்கிழங்கு மசாலா போண்டாவை வாங்கி சாப்பிடுவோம். எண்ணெய் குடிக்காமல், பார்ப்பதற்கு அழகாக நம்மை சாப்பிட இழுக்கும் அந்த உருளைக்கிழங்கு போண்டாவை நம் கையாலேயே, நம் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். ஒரு வாட்டி அந்த உருளைக்கிழங்கு போண்டாவை நம்ம வீட்ல ட்ரை பண்ணிப் பார்க்கலாமா. வாங்க அந்த ரெசிபியை இப்பவே தெரிஞ்சுக்கலாம்.

potato-urulai

முதலில் ஒரு 250 கிராம் அளவு உருளைக்கிழங்கை எடுத்து குக்கரில் போட்டு 2 விசில் வைத்து நன்றாக வேகவைத்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு வெந்து வந்ததும் அந்த உருளைக் கிழங்குகளை தோல் உரித்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு ரொம்பவும் கொழகொழவென வெந்துவிடக்கூடாது. வெந்த உருளைக்கிழங்குகளை நசுக்கிய பின்பு பார்ப்பதற்கு கொஞ்சம் ஒன்றும் இரண்டுமாக தான் இருக்க வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக உருளைக்கிழங்கு மசாலாவை தாளிக்கப் போகின்றோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக இஞ்சித் துருவல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, கருவேப்பிலை ஒரு கொத்து, சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் நன்றாக வதக்கி விட்டுக் கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதங்கட்டும்.

masala-bonda1

அடுத்தபடியாக இந்த மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், சேர்த்து ஒருமுறை கலந்து விட்டு நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்குகளை கடாயில் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து விட்டு விடுங்கள். 1 நிமிஷம் வரை உருளைக்கிழங்கை போட்டு வதக்கி, இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவி, கலந்து விட்டால் போதும். மசாலா தயார். அடுப்பை அணைத்துவிட்டு இதை ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலா அப்படியே ஆறட்டும்.

- Advertisement -

இப்போது மேலே போண்டா விற்கு தேவையான மாவை தயார் செய்ய போகின்றோம். ஒரு அகலமான பௌலில் கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 3/4 கப், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, ஆப்ப சோடா – 2 சிட்டிகை, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் நன்றாக கலந்துவிட்டு கொள்ளுங்கள். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி இந்த மாவை இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

masala-bonda3

அதன் பின்பு இன்னும் கொஞ்சம் லேசாக தண்ணீர் ஊற்றி மாவை லூஸாக கரைத்துக் கொள்ளுங்கள். இட்லி மாவு பதத்திற்கு கட்டியாகவும் இருக்கக்கூடாது. தோசை மாவு பதத்திற்கு தண்ணியாகவும் இருக்கக்கூடாது. கையில் தொட்டால் அந்த மாவு நம் கையில் ஒரு லேயராக ஒட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த மாவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

masala-bonda2

உருளைக்கிழங்கு மசாலாவை தயார் செய்து தட்டில் கொட்டி ஆற வைத்து இருக்கின்றோம் அல்லவா. அந்த மசாலாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறிய உருண்டைகளை பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து தயார் செய்து வைத்திருக்கும் கடலை மாவில் தோய்த்து, ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்க வேண்டியதுதான்.

எண்ணெயை நன்றாக சூடு செய்து விட்டு, அதன்பின்பு போண்டாக்களை விட்டு பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். சூப்பரான உருளைக்கிழங்கு மசால் போண்டா தயார்.

masala-bonda4

பின்குறிப்பு: நாம் கரைக்கும் கடலை மாவு கலவையை பக்குவமாகக் கரைத்துக் கொள்ளவேண்டும். ஒரேயடியாக தண்ணீரை ஊற்றி ரொம்பவும் தண்ணி ஆக்கிவிடாதீர்கள். அரிசிமாவு கட்டாயம் சேர்க்க வேண்டும். அப்போதுதான் போண்டா மொறுமொறுவென நமக்கு கிடைக்கும். மசாலாவுக்கு உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது பக்குவமாக வேக வைக்கவேண்டும். சொதசொதவென வேக வைத்துவிட்டால் மசாலாவில் தண்ணீர் விடும்.

- Advertisement -