நாளை அமாவாசை தினத்தன்று ஒரு கைப்பிடி உப்பை மட்டும், தண்ணீரில் இப்படி கரையுங்கள் போதும். உங்களை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கஷ்டமும், கடனும் தண்ணீரில் கரைந்தே போகும்.

amavasai3
- Advertisement -

அமாவாசை தினம் என்பது முன்னோர்கள் வழிபாட்டுக்கு மட்டும் உகந்தது அல்ல. முன்னோர் வழிபாட்டுடன் சேர்ந்து குலதெய்வ வழிபாட்டையும் செய்யலாம். நம் கஷ்டங்கள் தீர நாம் செய்யக் கூடிய பரிகாரங்கள் கைமேல் பலன் அளிக்க வேண்டும் என்றாலும், அந்த பரிகாரத்தை அமாவாசை தினத்தில் செய்யலாம். காரணம், அமாவாசை நாளன்று பிரபஞ்சத்தில் பரவி இருக்கும் நேர்மறை ஆற்றலும், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வலம் வரும் முன்னோர்களின் ஆசீர்வாதம், குலதெய்வ ஆசீர்வாதமும் ஒரு சேர கிடைக்கும் போது நாம் செய்யக்கூடிய பரிகாரம் கூடிய சீக்கிரமே முழு பலனை நமக்கு தந்து விடும்.

amavasai1

அந்த வரிசையில் நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று, கடன் கரைந்து போக வேண்டும் என்று கல் உப்பை எப்படி தண்ணீரில் கரைப்பது என்பதைப் பற்றிய பரிகாரத்தை தான் இந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அமாவாசை தினம் என்பது திருஷ்டி கழிப்பதற்கும் உகந்த ஒரு நாளாகத்தான் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இன்று இரவே ஒரு கைப்பிடி கல் உப்பை ஒரு மண் அகல் விளக்கில் வைத்து, அந்தக் கல் உப்பை உங்கள் வீட்டு வடகிழக்கு மூலையில் வைத்துவிட வேண்டும். மண் அகல் விளக்கில் தான் இந்த உப்பை வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கண்ணாடி டம்ளர், பீங்கான் பௌலில் கூட நிரப்பி வைத்துக் கொள்ளலாம். மண்ணினால் செய்யப்பட்ட பொருளில் வைப்பது என்பது மேலும் சிறப்பு.

salt

இன்று இரவே இப்படி ஒரு குடுவையில் கல் உப்பை நிரப்பி வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்துவிட வேண்டும். நாளை தினம் அமாவாசை. அமாவாசைக்கு உங்கள் வீட்டு முறைப்படி முன்னோர்கள் வழிபாடு அத்தனையையும் முடித்து விடுங்கள். வழிபாட்டை நிறைவு செய்து முடித்த பின்பு, நாளை மதிய நேரமோ அல்லது மாலை நேரத்திலோ உங்களுக்கு எப்போது சவுகரியமோ, நாளை மாலை 6 மணிக்கு முன்பு, வீட்டில் விளக்கு வைப்பதற்கு முன்பாகவே, வடகிழக்கு மூலையில் வைத்திருக்கும் உப்பை உள்ளங்கைகளில் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குலதெய்வத்தை மனதார வேண்டி, முன்னோர்களையும் மனதார வேண்டி, கஷ்டமும் கடனும் கரைந்து போக வேண்டும் என்று உள்ளங்கையில் இருக்கும் உப்பை தண்ணீரில் அப்படியே கரைத்து விடுங்கள். வடகிழக்கு மூலையில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அந்த உப்பு உங்கள் கையிலிருந்து கரையும் போது, ஆத்மார்த்தமான வேண்டுதலை இறைவனிடம் நீங்கள் வைக்க வேண்டும்.

நாளை அமாவாசை என்பதால், உங்களுடைய கைகளினால் இந்த உப்பை இப்படி கரைக்கும் போது உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும், கெட்ட சக்தியும், துரதிருஷ்டம், இதோடு சேர்த்து கடனும் அந்த தண்ணீரில் கரைந்து போய்விடும். உப்பை கரைத்து இந்த தண்ணீரை வீட்டுக்கு வெளியில் கால் படாத இடத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஊற்றிக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம். செடிகளில் ஊற்ற வேண்டாம்.

water

உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் அனைத்தும் அந்த தண்ணீரில் இருக்கும் என்பதால் மண் பாங்கான இடத்தில் ஊற்றி விட்டு விடுங்கள். அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை செய்து உடனே உங்களுக்கு ஒரு மனநிறைவு ஏற்படும். கடனை அடைப்பதற்கான வழியும் சீக்கிரமே கிடைக்கும். வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அடுத்து வரக்கூடிய நாட்களில் படிப்படியாக குறையும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்று குலதெய்வத்தையும் நம்முடைய முன்னோர்களையும் வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -