நாளை (11/4/2021) அமாவாசை திதியில் இந்த முக்கியமான நேரத்தை தவர விட்டுவிடாதீர்கள்! பித்ரு வழிபாடு மகத்துவங்கள்!

pithru-tharpanam-karudan

நாளை அமாவாசை திதியில் முன்னோர்கள் வழிபாடு செய்வது பல்வேறு நன்மைகளை நமக்கு கொடுக்கும். ஒவ்வொரு அமாவாசை நாளில் பித்ரு வழிபாடு செய்வது நம்முடைய அடுத்தடுத்த சந்ததிகளையும் வளமுடன் வாழ வைக்கும். அமாவாசை திதியுடன் கூடிய சோடசக்கலை நேரம் மிகவும் விசேஷமானது. இந்த நேரத்தை தவறவிடாமல் இறை வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டிய வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தரும். அது என்ன நேரம்? அமாவாசை திதியில் செய்ய வேண்டியவை என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

tharpanam1

பொதுவாகவே அமாவாசை நாளில் உபவாசம் இருந்து முன்னோர்களுக்கு வழிபாடு செய்து வருவது வழக்கம். முன்னோர் வழிபாடு செய்வது என்பது மிகவும் முக்கியமானது. இதனைத் தட்டிக் கழிப்பவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் உண்டாகும். அமாவாசை திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது முறையாகும். காலையில் எழுந்து தலைக்கு ஸ்நானம் செய்து கோவிலில் தர்ப்பணம் கொடுப்பது முறையாகும். கோவில்களில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலேயே எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அமாவாசையில் எள்ளும், தண்ணீரும் இறைப்பது தான் நம் முன்னோர்களை முழு திருப்திபடுத்தும். அவர்களின் ஆசியை பரிபூரணமாக உங்களுக்கு பெற்றுக் கொடுக்கும்.

அமாவாசையில் பித்ருக்களுக்கு மட்டுமல்லாமல், கோ வழிபாடு செய்வதும் உண்டு. அதாவது பசு மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுப்பது, வாழைப் பழம் கொடுப்பது அல்லது வெல்லத்துடன் பச்சரிசி கலந்து கொடுப்பது போன்ற விஷயங்களை செய்வது உண்டு. இவ்வாறு பசுக்களுக்கு தானம் செய்வதன் மூலம் நம்முடைய வாழ்வின் சகல தோஷங்களும் நிவர்த்தி அடையும். சாஸ்திரங்களில் கோ தானம் செய்வதும், பசுக்களுக்கு தானம் செய்வதும், அளப்பரிய பலன்களை கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

banana-for-cow

சுமங்கலிப் பெண்களை தவிர முன்னோர்களுக்கு அனைவரும் தர்ப்பணம் கொடுக்கலாம். தாய், தந்தை மட்டுமல்லாமல் இரத்த வழி உறவினர்கள் யாருக்கு வேண்டுமானாலும் படையல் படைத்து வழிபாடு செய்து அவர்களின் ஆசியைப் பெற்று கொள்ளலாம். கோவில்களில் தர்ப்பணம் செய்து முடித்த பின் வீட்டிற்கு வந்து முன்னோர்களுக்கு படையல் போட்டு அதில் நாட்டு காய்கறிகளை சேர்த்து நிவேதனம் வைத்து வழிபடுவது உண்டு. வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்கள் பித்ரு படையலில் இருக்கக்கூடாது என்கிற நியதி உண்டு. பித்ரு லோகத்தில் புடலங்காய்க்கு தனி மதிப்பு உண்டு ஆகவே புடலங்காயை பித்ரு படையலில் சேர்ப்பது மிகவும் விசேஷமானது. பூஜை முடிந்து காக்கைக்கு உணவு வைத்து அது எடுத்துக் கொண்டபின் சாப்பிட வேண்டும்.

ஒவ்வொரு அமாவாசை திதியில் நம் முன்னோர்கள் நம் வீட்டு வாசலில் பசி, தாகத்துடன் வந்து நிற்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து பசி, தாகத்தை தீர்த்து வைத்தால் நம் வேண்டுதல்கள் அப்படியே நிறைவேறும். நம் வாழ்க்கை செழிக்கும் என்பது நியதி. அதே போல அமாவாசைத் திதியில் வரும் சோடசகலை நேரத்திற்கு தனி சிறப்பு உண்டு.

mantra-thiyanam

ஏப்ரல் 12ஆம் தேதி காலை 7:40 மணி முதல் 9:40 மணி வரை சோடசக்கலை நேரம் ஆகும். 8:40 மணிக்கு அமாவாசை திதி முடிவடையும். இந்நேரத்தில் நீங்கள் தியான நிலையில் அமர்ந்து இறைவனிடத்தில் எதை வேண்டினாலும் உடனே கிடைக்கும். சோடசக்கலை நேரத்திற்கு அப்படி ஒரு சக்தி இருப்பதாக ஜோதிட சாத்திரங்கள் குறிப்பிடுகிறது எனவே அமாவாசை திதியையும், பித்ரு தர்ப்பணம், சோடசகலை நேரத்தையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது வாழ்க்கையில் சுபீட்சம் அடைய செய்யும்.