இன்றைய அவசர அவசரமான சூழ்நிலையில், நிறைய பேருக்கு இன்னைக்கு தான் அமாவாசை என்றே மறந்து போயிருக்கும். வேலைக்கு சென்ற பிறகோ அல்லது நண்பர்களையோ உறவுகளோ பார்த்த பிறகு தான் இன்று அமாவாசையா என்று யோசிப்பார்கள், அல்லது சில வீடுகளில் சூழ்நிலை காரணமாக இன்றைய அமாவாசை திதி வழிபாட்டை தவற விட்டிருப்பார்கள்.
நீங்கள் உங்களுடைய முன்னோர்கள் வழிபாட்டை இன்று தவறவிட்டீர்களா. கவலை வேண்டாம் அந்த முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுத்தர இன்னொரு அருமையான பரிகாரத்தையும் இன்று நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
அமாவாசை வழிபாட்டை தவற விட்டவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு, இன்று வீட்டில் கண் திருஷ்டி, கெட்ட சக்தி நீங்க எல்லோரும் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தையும் பார்த்து விடுவோம். சின்ன மண் அகல் விளக்கு அல்லது பேப்பர் கப், அல்லது கண்ணாடி பவுல், பீங்கான் பவுல் எது வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒவ்வொரு கைப்பிடி கல் உப்பை போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். இந்த தயார் செய்த கப்பை வீட்டில் ஆங்காங்கே ஒவ்வொரு இடத்தில் வைக்க வேண்டும். வரவேற்பு அறையில், குளியலறையில், படுக்கையறையில், பூஜை அறை சமையலறையில், உங்களுடைய வீட்டில் வேறு ஏதாவது அறை இருந்தால் அந்த இடத்தில் இப்படி தயார் செய்த கல் உப்பு பவுலை வைத்து விடுங்கள்.
இன்று இரவு முழுவதும் அந்த உப்பு அப்படியே திறந்தபடி இருக்கட்டும். உங்கள் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை எல்லாம் இந்த உப்பு ஈர்த்துக் கொள்ளும். மறுநாள் காலை எழுந்த கையோடு இந்த உப்பை எல்லாம் எடுத்து தண்ணீரில் கொட்டி கரைத்து அந்த தண்ணீரை சிங்கில் கொட்டி விடுங்கள். வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க இந்த பரிகாரம் கை கொடுக்கும்.
அமாவாசை வழிபாட்டை தவறவிட்டவர்கள்
சரி, அமாவாசை வழிபாட்டை தவறவிட்டவர்களுக்கு வருவோம் நீங்க மாதவிடாய் ஆன பெண்களாக இருந்தால், உங்கள் வீட்டில் ஆண்களை இந்த பரிகாரத்தை செய்யச் சொல்லுங்கள். உங்கள் வீட்டின் வரவேற்பறையிலோ அல்லது வீட்டிற்கு வெளியே சிட் அவுட் இருக்கும் அல்லவா அந்த இடத்திலோ இந்த பரிகாரத்தை செய்யலாம். நீங்க தூங்கும் இடத்தில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது.
வரவேற்பறையில் ஒரு ஓரமாக 1 டம்ளர் முழுவதும் சுத்தமான தண்ணீரை வைத்து விடுங்கள். அதற்கு பக்கத்தில் ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். உங்கள் முன்னோர்களை மனதார நினைத்துக் கொண்டு, இன்றைய வழிபாட்டை தவறவிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் தூங்க செல்லலாம்.
இதையும் படிக்கலாமே: 06-06-2024 அமாவாசை சோடசக்கலை நேரம்
அந்த டம்ளர் தண்ணீர் திறந்தபடியே இருக்கட்டும். விளக்கு எரிந்த தானாக மலை ஏறலாம். அமாவாசை இரவு உங்கள் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு இந்த தண்ணீர் பிரசாதமாக இருக்கும். நீங்கள் ஏற்றி வைத்த விளக்கு அவர்களுக்கு வழிகாட்டும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் நீங்கள் முன்னோர் வழிபாட்டை செய்ய தவறி இருந்தாலும், அவர்கள் மனம் குளிர்ந்து உங்களை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை செய்து பலன் பெறவும்.