நாளை வரக்கூடிய அமாவாசை தினத்தன்று தவறாமல் இதை மட்டும் செய்யுங்கள். உங்களை துரத்திக் கொண்டிருக்கும் அத்தனை கஷ்டங்களுக்கும் தீர்வு கிடைக்கும். தரித்திரம் உடனே விலகும்.

amavasai3
- Advertisement -

நம்முடைய இந்து சாஸ்திரத்தின் படி இந்த அமாவாசை தினம் என்பது முன்னோர்களுடைய வழிபாட்டிற்கு உரியது. இதோடு மட்டுமல்லாமல் அமாவாசை தினத்தில் நாம் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களுக்கு உடனடியாக தீர்வினை பெற முடியும். அந்த வரிசையில் நாளை வரக்கூடிய அமாவாசை தினத்தன்று நாம் அனைவரும் மறக்காமல் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான சில தகவல்களை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalaya-ammavasai

தாய் தந்தையர்கள் இல்லாதவர்கள் அமாவாசை தினத்தன்று கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும். அப்படி தலைக்கு குளிக்கும் சமயத்தில் அந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, ஒரு ஸ்பூன் அளவு எள்ளு சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதன் பின்பு அந்த தண்ணீரில் அமாவாசை தினத்தில் தலைக்கு குளித்தால் உங்களை பிடித்த தரித்திரம் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அமாவாசை தினத்தில் தாயோ அல்லது தந்தையோ இல்லாதவர்கள்தான் இப்படி இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து தலைக்கு குளிக்க வேண்டும். தவிர தாய்தந்தையர் உள்ளவர்கள் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு உப்பை போட்டு விட்டு, தலைக்கு குளிக்க வேண்டாம். உடம்புக்கு மட்டும் குளித்துக் கொண்டால் போதும். உங்களைப் பிடித்த தரித்திரம் விலகும். அமாவாசை தினத்தன்று இந்த பிரபஞ்சத்தில் இருந்து வெளிவரும் ஆற்றலுக்கு இயற்கையாகவே சக்தி உண்டு. இந்த தினத்தில் கடலுக்கு சென்று குளிக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அது முடியாத பட்சத்தில் இந்த கல் உப்பு தண்ணீர் குளியலை மேற்கொள்கிறோம்.

sudam

இதோடு சேர்த்து அமாவாசை தினத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் திருஷ்டி கழிக்க மறக்கவேண்டாம். கற்பூரம் அல்லது எலுமிச்சம் பழம் அல்லது பூசணிக்காயை வைத்து திருஷ்டி கழித்து கொள்வது வீட்டில் இருப்பவர்களுடைய நலனுக்கு மிக மிக நல்லது. இதில் எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் ஒன்றாக அமரவைத்து அவர்களுடைய தலையை சுற்றி தண்ணீரில் போட்டு விடுங்கள், மறக்காதீர்கள்.

- Advertisement -

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு விஷயங்களும் நம்முடைய நன்மைக்காக. அமாவாசை தினத்தில் நம்முடைய முன்னோர்களின் நன்மைக்காக நாம் செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளது. தாய் தந்தையை இழந்தவர்கள் தங்களுடைய பெற்றோருக்கு கொடுக்க வேண்டிய தர்ப்பணத்தை தவறாமல் கொடுத்து விட வேண்டும்.

crow feeding

உங்கள் வீட்டு முறைப்படி கட்டாயம் பூஜை புனஸ்காரங்களை செய்து விடவேண்டும். இதோடு சேர்த்து நாளையதினம் சாதத்துடன் எள்ளு தயிர் சேர்த்து பிசைந்து காகத்திற்கு வைக்க மறக்கக்கூடாது. இது நம்முடைய முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக.

அடுத்தபடியாக இந்த அமாவாசை தினத்தில் கட்டாயமாக குலதெய்வ வழிபாடு நன்மை தரும். குடும்பத்தோடு வீட்டில் இருந்தபடியே உங்கள் குலதெய்வத்தை நினைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குலதெய்வத்தை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால் அந்த வேண்டுதல் உடனே பலிக்கும். இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர இந்த நாளில் வேண்டுதல் வைக்கலாம். உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது அம்மன் தெய்வங்கள் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று, ஒரு எலுமிச்சம் பழத்தை அம்மன் மடியில் வைத்து, அந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்தால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி விரட்டி அடிக்கப்படும்.

Varahi amman

இவ்வாறாக மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை இந்த அமாவாசை தினத்தில் மட்டுமல்ல மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை அன்று உடல் சுத்தத்துடன் சேர்ந்த மனத்தூய்மையோடு பின்பற்றி வந்தாலே வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகள் தானாக படிப்படியாக குறைவதை உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து நல்ல பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -