அமாவாசை தினத்தன்று கட்டாயம் செய்ய வேண்டியவை எவை? கட்டாயம் செய்யக் கூடாதது எது?

amavasai
- Advertisement -

சில நாள் நட்சத்திரங்களில், சில விஷயங்களை செய்ய வேண்டும், சில விஷயங்களை செய்யக்கூடாது என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அமாவாசை தினத்தன்று நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எவை? செய்யக்கூடிய காரியங்கள் எவை? என்பதை பற்றிதான் ஆன்மீக ரீதியாக சில விஷயங்களை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அமாவாசை தினம் என்றாலே அது நம்முடைய முன்னோர்களுக்கு உரிய தினம், குலதெய்வ வழிபாட்டிற்கு உரிய தினம், திருஷ்டி கழிப்பதற்கு உகந்த நாள், என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். கட்டாயம் இந்த மூன்று விஷயங்களை தவறாமல் எல்லோரும் செய்துவிட வேண்டும். இதை தவிர்த்த இன்னும் சில தெரியாத விஷயங்களைப் பற்றியும் இன்று நாம் தெரிந்துகொள்வோம்.

amavasai

சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் வரக்கூடிய இந்த நாளைத்தான் அமாவாசை தினம் என்று சொல்கின்றோம். அமாவாசை அன்று சந்திர பகவானின் தரிசனம் நமக்கு கிடைக்காது. அந்த நாளில் நாம் நல்ல காரியங்களை செய்ய தொடங்கலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருடைய மனதில் உள்ளது. அந்த சந்தேகத்திற்கான பதிலையும் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மனோகாரகன் சந்திர பகவான். அந்த சந்திர பகவான் அமாவாசை தினத்தன்று முழுமையாக மறைக்கப்படுகின்றான். அப்படியிருக்கும்போது அன்றைய தினத்தில் உங்களது மனம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சில நல்ல முடிவுகளை இந்த அமாவாசை தினத்தில் எடுப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

amavasai

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நல்ல முடிவுகளை நாம் எடுக்கலாமே தவிர, அந்த நல்ல விஷயங்களை அந்த குறிப்பிட்ட அமாவாசை நாளில் செய்யக்கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். அதாவது அமாவாசை அடுத்து வரக்கூடிய வளர்பிறை நாட்களில் எந்தெந்த நல்ல விஷயங்களை செய்யலாம் என்ற தீர்மானத்தை இந்த அமாவாசை தினத்தன்று தாராளமாக எடுக்கலாம். அதுவும், உங்களுக்கு எந்தவிதமான குழப்பமும் தடுமாற்றமும் இல்லை எனும் பட்சத்தில்.

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு ஏதோ ஒரு நடுக்கம், ஏதோ ஒரு மனக்குழப்பம், மன சஞ்சலம் இருக்கும்பட்சத்தில் அந்த அமாவாசை தினத்தன்று நீங்கள் அந்த முடிவை எடுக்காமல் தள்ளிப்போடுவது நல்லது. குறிப்பாக உங்களுக்கு அந்த அமாவாசை தினத்தில் சந்திராஷ்டமம் வந்தால் அந்த தினத்தில் நீங்கள் எதை செய்தாலும் அது உங்களுக்கு பாதகமாக அமையும்.

praying-god1

ஏனென்றால் உங்களுடைய மனது தெளிவாக இல்லை, மனம் தெளிவாக இல்லாத பட்சத்தில் உங்களுக்கு ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். சந்திரனின் பலம் குறைவாக இருக்கும் சமயத்தில், சந்திரன் உதயம் ஆகாமல் இருக்கும் அந்த அமாவாசை தினத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் சில சமயம் எதிர்மறையாக அமைந்துவிடும்.

- Advertisement -

chandra-graham1

இதனால்தான் அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அமாவாசையை வைத்துக்கொண்டு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யாதே, அதன் மூலம் பிரச்சனை வரும் என்று. காரணம் இதுதான். மனோகாரகன் சந்திரன் பகவான் இல்லாத காரணத்தினால், அமாவாசை தினத்தன்று நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் நமக்கு சாதகமாக அமையாமல் போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும், என்ற விஷயத்தை நம் முன்னோர்கள் அறிந்துள்ளார்கள்.

chandra-graganam-2

காரண காரியங்கள் இல்லாமல் அவர்கள் எதையும் நமக்கு சொல்லி வைத்துவிட்டு செல்வது இல்லை. நமக்கே தெரியும். சாதாரண நாட்களில் நம்முடைய மன நிலைமை எப்படி இருக்கின்றது. அமாவாசை தினம் வரும் சமயத்தில் நம்முடைய மனது எப்படி இருக்கிறது என்று. உங்களுக்கு அமாவாசை தினம் வரும் சமயத்தில் அதிகமாக கோபம் வரும் பட்சத்தில், மன அமைதி இல்லாத பட்சத்தில், நீங்கள் எந்த ஒரு நல்ல முடிவையும் இந்த அமாவாசை தினத்தன்று எடுக்கக்கூடாது.

Chandra-grahan-mantra

அமாவாசை தினத்தன்றும் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள். உங்களுடைய மனது அமைதியாக தான் உள்ளது சந்திரனின் பலம் உங்களுடைய ஜாதகத்தில் அதிகமாகவே கிடைக்கும் பட்சத்தில் சில நல்ல முடிவுகளை இந்த அமாவாசை தினத்தில் எடுப்பதன் மூலம் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.

chandra bagawan

இந்த அமாவாசை நாள் நல்ல நாளாக அமைவதும் கெட்ட நாளாக அமைவதும் தனி நபருடைய கிரக நிலையை பொறுத்தது தான். நம்முடைய நேரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் எந்த நாளும் நமக்கு நல்ல நாள். நேரம் சரியில்லாத சமயத்தில் அமிர்த யோகமாகவே இருந்தாலும் அதன் மூலம் நமக்கு நல்லது கிடைப்பது கிடையாது என்ற யதார்த்தத்தை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -