அமாவாசை அன்று நல்ல காரியங்களை செய்யலாமா? உண்மையில் அமாவாசை நல்ல நாளா? கெட்ட நாளா?

amavasai
- Advertisement -

அமாவாசை நாள் அன்று பலரது வீட்டிலும் படையல் போட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது என்பது வழக்கமாக இருக்கிறது. அன்றைய தினம் அனைத்து கடைகளிலும், வீடுகளிலும் திருஷ்டி சுற்றிப் போடுவதும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. ஒரு சிலர் அமாவாசை அன்று ஏதேனும் புதிய காரியங்களையும் துவங்குவதுண்டு. இவ்வாறு இரண்டு வகையான நேர்மறை விஷயங்களையும் அன்றைய தினம் செய்வதால் பலருக்கும் அமாவாசை தினம் நல்ல நாளா? கெட்ட நாளா? என்ற சந்தேகம் இருக்கிறது. இவ்வாறு அம்மாவாசை தினத்தின் சிறப்புகள் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

amavasai1

தெற்குப் பகுதி:
தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமாவாசை தினத்தை நல்ல நாளாக பார்ப்பதில்லை. ஏனெனில் அன்றைய தினத்தில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறோம். எனவே அன்றைய தினத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறது.

- Advertisement -

வடக்குப் பகுதி:
ஆனால் வடக்கு பகுதியில் அவ்வாறு யாரும் நினைப்பதில்லை. நிறைந்த அமாவாசை அன்று கடை திறந்து இருக்கிறேன், புதிய வாகனம் வாங்கி உள்ளேன், பத்திரம் பதிவு செய்து இருக்கிறேன் என்றெல்லாம் நிறைய புதிய விஷயங்களை அமாவாசை தினத்தன்று துவங்குகிறார்கள்.

dharpanam

ஆனால் பொதுவாக அமாவாசை தினத்தை யாரும் நல்ல நாளாக ஏற்றுக்கொள்வது கிடையாது. அன்றைய தினம் சந்திரனும், சூரியனும் ஒரே நேர் கோட்டில் வருகிறது. அதாவது ஒன்றை ஒன்று நேராக பார்த்துக் கொள்கிறது. இன்றைய தினத்தில் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமியை நோக்கி வர ஆரம்பிக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் வந்து தங்களின் சன்னதிகளை மறைமுகமாக கவனித்து அவர்கள் செய்யும் செயல்களை ஆசீர்வதித்து செல்கிறார்கள்.

- Advertisement -

எனவே பித்ரு தேவதைகள் எனப்படும் நமது முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு மரியாதை செய்து புதிய காரியங்களை துவங்கும் பொழுது அவை நிச்சயம் நல்லதாகவே நடக்கும். எனவே அமாவாசை அன்று எந்த ஒரு நல்ல காரியங்களையும் துவங்குவது என்பது நன்மையாகுமே தவிர தீமையில் முடியாது. அமாவாசை முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதால் அந்த நாள் மிகவும் நல்ல நாளே.

amavasai-thithi-pournami

தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மற்றும் மாசி மாத அமாவாசை இவை அனைத்தும் இந்துக்களின் சிறப்பு வாய்ந்த தினங்களாக இருக்கின்றன. இன்றைய தினம் முன்னோர்கள் வழிபாட்டுக்கு சிறந்த நாளாக இருக்கிறது. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். இன்றைய தினத்தில் உலகத்தை இயக்கும் சூரியனும், சந்திரனும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்வதால் காந்த சக்தி ஏற்படுகிறது. அன்றைய தினத்தில் மாமிசம் சாப்பிடுவதை தவிர்ப்பது என்பது மிகப்பெரிய ஜீவகாருண்யம் ஆகும்.

அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதிகமாக வேலை செய்யும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் அதுமட்டுமல்லாமல் அமாவாசை தினத்தன்று தான் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

girl-baby
அமாவாசை அன்று சூரிய கலையும், சந்திர கலையும் சேர்வதால் சுழுமுனை எனும் நெற்றிக்கண் பலப்படுகிறது. எனவே அன்றைய தினத்தில் நிறைய பூஜைகளும், சாஸ்திர சம்பிரதாயங்கள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பலரும் கடலில் நீராடி தங்களின் தோஷத்தை கழிக்கின்றனர்.

இவ்வாறு பல நன்மை தரக்கூடிய விஷயங்கள் அமாவாசை தினத்தில்தான் செய்யப்படுகின்றன. எனவே அவரவர் மனதைப் பொறுத்தே அவர் செய்யும் செயல்களின் பிரதி பலிப்பும் இருக்கிறது. இவ்வாறு அமாவாசை நாளை நல்ல நாளாக பார்ப்பவர்களுக்கு அது நன்மை தரக்கூடிய தினமாகவே அமைகிறது.

- Advertisement -