முடி வளர்ச்சியை தூண்டும் மோர்

butter milk hair
- Advertisement -

முடி பராமரிப்பை நாம் மேற்கொள்வதற்கு தலைக்கு எண்ணெய் எப்படி தயார் செய்வது என்றும், அதேசமயம் ஹேர் பேக் எப்படி போடுவது என்றும், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தினால் நம்முடைய முடி ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பல பதிவுகளை நாம் பார்த்திருப்போம். இப்படி இவை அனைத்தையும் மேற்கொண்டாலும் ஒரு சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை என்பது நிற்கவே நிற்காது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முறை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருக்கு முடி உதிர்தல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வது உடலில் இருக்கக்கூடிய சத்துக் குறைபாடு தான். முடி உதிர்தல் ஆக இருந்தாலும் முதலில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்புற பராமரிப்பை செய்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பொருட்களையும் உண்ண வேண்டும்.

- Advertisement -

இன்றைய தலைமுறையில் இருப்பவர்கள் இந்த மாதிரி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்களை சாப்பிட கொடுத்தால் கண்டிப்பாக முறையில் சாப்பிட மறுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த வித தயக்கமும் இன்றி சாப்பிடுவதற்கு எந்த முறையில் மோரை தயார் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். பொதுவாக பால், தயிர் இவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக மோராக நாம் சாப்பிட்டோம் என்றால் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த மோருடன் நம்முடைய முடி வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய பொருட்களையும் நாம் சேர்த்து தயார் செய்தோம் என்றால் நம்முடைய முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும். முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழு நெல்லிக்காய் ஒன்றை கொட்டை நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு இன்ச் இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு கொத்து கருவேப்பிலை, இரண்டு இனுக்கு கொத்தமல்லி, ஒரே ஒரு பச்சை மிளகாய் இதனுடன் ஒரு கப் தயிர் போட்டு ஒரு முறை மிக்ஸியை ஓட்டிவிட்டு பிறகு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு இதை சேர்த்து மோராக அடித்து குடிக்க வேண்டும்.

- Advertisement -

இதில் சேர்க்கப்பட்டுள்ள நெல்லிக்காய் நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியது. முடி உதிர்தல் பிரச்சனையை முற்றிலும் நீக்கக்கூடிய ஒரு அற்புதமான கனியாக தான் நெல்லிக்காய் திகழ்கிறது. இதே போல் கருவேப்பிலையும் இரும்பு சத்தை அதிகரித்து தரக்கூடியதாகவும் இளநரையை போக்கக்கூடியதாகவும் முடி உதிர்தலை நிறுத்தி கருமையாக அடர்த்தியாக வளரச் செய்வதாகும் திகழ்கிறது. மேலும் இதில் உள்ள கொத்தமல்லி மற்றும் இஞ்சியும் நம்முடைய முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்களாக தான் திகழ்கின்றன. இவை அனைத்தையும் தனித்தனியாக நாம் கொடுக்கும் பட்சத்தில் அதை யாரும் சாப்பிட மாட்டார்கள். இப்படி நாம் மோரில் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் எந்த வித தயக்கமும் இன்றி சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: முருங்கை பிசின் பயன்கள்

ஆரோக்கியமான சத்து மிகுந்த மோரை இந்த முறை பயன்படுத்தி நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் முடி ஆரோக்கியத்தையும் அதிகரித்து கொள்வோம்.

- Advertisement -