இயற்கையான முறையில், உங்களது நரை முடியை 30 நாட்களில் நிரந்தரமாக கருப்பாக மாற்ற, இந்த கருப்பு எண்ணெய் போதுமே!

hair3

நம்முடைய நரைமுடியை கருப்பாக மாற்ற எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றித் தான் வருகின்றோம். ஆனால் இந்த வெள்ளை முடி பிரச்சனைக்கு மட்டும் நிரந்தரமான தீர்வு கிடைப்பதே கிடையாது. இதனால் செயற்கையான பொருட்களை தலையில் போட்டு, முடியை கருப்பாக மாற்றுவதன் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் ஏராளம். இருப்பினும் அழகுக்காக செயற்கையான அந்த பொருட்களை நாம் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது. நம்முடைய நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற, இயற்கையான முறையில் பாரம்பரியமான ஒரு வழி உள்ளது. அது என்ன வழி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

hair1

ஒரு கடாயில் 200 ml அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் அளவு காய்ந்த நெல்லிக்காய் பொடியை போட்டு, நன்றாக கலந்து விட்டு விடுங்கள். நெல்லிக்காய் பொடி, கட்டி பட்டுவிடக் கூடாது. இந்த நெல்லிகாய் பொடி கடைகளிலேயே விற்கிறது. அதை நல்ல பிரண்டாக பார்த்து வாங்கி கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, இந்த கடையை அடுப்பின் மேல் எடுத்து வைத்துவிடுங்கள். அதன் பின்பு ஒரு கரண்டியை வைத்து இந்த எண்ணெய்யை கலந்து கொண்டே, 10 நிமிடங்கள் வரை காய்ச்ச வேண்டும்.

இந்த எண்ணெயானது காயக்காய கருப்பு நிறமாக மாறும். இதேபோல் கொஞ்சம் எண்ணெயின் பதம் கெட்டியாக ஆரம்பிக்கும். அதன் பின்பு, சரியாக பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட வேண்டும். 24 மணிநேரமும் இது அப்படியே ஆரட்டும். ஒரு வெள்ளைத் துணியை மேலே போட்டு மூடி வைத்துவிடுங்கள். அதன் பின்பு ஒரு ஸ்டீல் வடிகட்டியில் இந்த எண்ணெயை ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். துணியிலும் வடிகட்டலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

amla-powder

கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய, திக்கான இந்த நெல்லிக்காய் பொடி எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேகரித்து வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை நம்முடைய தலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாரத்தில் 3 நாட்கள் இந்த எண்ணெயை தலையில் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரம் கட்டாயம் இந்த எண்ணெய் தலையில் ஊற வேண்டும்.

அதன் பின்பு நல்ல ஹெர்பல் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். இதனுடைய பலன் உங்களுக்கு ஒரே நாளில் கட்டாயம் கிடைக்காது. தொடர்ந்து ஒரு மாதங்கள் வரை பயன்படுத்தி வந்தால் நல்ல வித்தியாசம் தெரியும். ஒரு வாரத்திலேயே உங்களுடைய முடியின் வண்ணம் லேசாக மாறி இருப்பதை உங்களால் உணர முடியும்.

hair4

இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியைத் தரக்கூடிய எண்ணெய் என்பதால், இயற்கையாகவே சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயைத் தொடர்ந்து நிச்சயமாக பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஆனால் இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. நிரந்தரமாக நம்முடைய முடி கரு கருவென நீளமாக அடர்த்தியாக வளரும் முடி கொட்டுவதும் நிற்கும். ட்ரை பண்ணி பாருங்க.