கருவறையில் தானாக பற்றி எறிந்த அம்மன் விளக்கு அதிசயம் – வீடியோ

Amman silai

கும்பகோணம் அருகே உள்ள தெப்பெருமநல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ருத்ரகேஸ்வரர் சிவன் கோவில். இங்குள்ள அம்மன் சன்னதியில் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு நிகழ்வு நடந்தது. அம்மன் சன்னதியில் உள்ள விளக்கானது தானாக எரிந்தும் நின்றும் காணப்பட்டதே அந்த அதிசயம். அதை கண்டு வியப்பின் உச்சிக்கே சென்ற பலர் அதை வீடியோ எடுக்கவும் தவறவில்லை. இதோ அதன் வீடியோ காட்சி.

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வானது இன்று பக்தர்களின் மனதில் நிலைபெற்றுள்ளது. இங்குள்ள சிவ லிங்கத்திற்கு ருத்ராட்சத்தால் அர்ச்சனை செய்வது இந்த கோவிலின் விஷேஷம். அதனிலேயே இங்குள்ள சிவன் ருத்ரகேஸ்வரர் என்று பெயர்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் இன்னும் பல அதிசயங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு நாகமானது வில்வத்தை எடுத்துவந்து இங்குள்ள சிவ லிங்கத்திற்கு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி பெரும் சிறப்பு பெற்று விளங்குகிறார். இங்குள்ள லிங்கமானது 12 ஜோதிலிங்கங்களின் கலவையாக போற்றப்படுகிறது. அதனால் இங்கு சித்தர்கள் சூட்சும வடிவில் வந்து சிவனை தரிசிப்பதற்காக நம்பிக்கை நிலவுகிறது.