நாளை சித்திரை அமாவாசை! அதி அற்புதம் வாய்ந்த இந்த நாளில், உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர, இந்த 2 விஷயங்களை மட்டும் செய்ய மறக்காதீங்க.

amavasai

நாளை சித்திரை அமாவாசை. இந்த அமாவாசை திதியோடு நாளை முழுவதும் பரணி நட்சத்திரமும் சேர்ந்து வருகின்றது. ஆக, நம்முடைய முன்னோர்களின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெறக்கூடிய இந்த நாளில், அந்த முருகப் பெருமானின் ஆசீர்வாதத்தையும் நாம் முழுமையாக பெறப் போகின்றோம். அதி அற்புதம் வாய்ந்த இந்த தினத்தில் நம்முடைய முன்னோர்களையும், அந்த முருகப் பெருமானையும் எப்படி வழிபாடு செய்தால், நம்முடைய வேண்டுதல்களுக்கு இரட்டிப்பு பலனை பெரும் முடியும் என்பதைப் பற்றிய சில ஆன்மீக ரீதியான தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalaya-ammavasai

சித்திரை அமாவாசை வழிபாடு:
பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள் இந்த சித்திரை அமாவாசை தினத்தன்று நீர் நிலைகளுக்குச் சென்று மறைந்த, தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலை நம்மால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. இருப்பினும் நம் வீட்டில் இருந்தபடியே முன்னோர்களது வழிபாட்டை எப்படி சுலபமான முறையில் செய்வது.

உங்களுடைய வீட்டில் இறந்தவர்களின் திருவுருவப் படத்தை சுத்தமாகத் துடைத்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து முடிந்தால் துளசி மாலை, இல்லையென்றால் கிடைத்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து, அவர்களுக்கு படைத்துவிட்டு, அதன் பின்பு அந்த உணவோடு கொஞ்சமாக கருப்பு எள் சேர்த்து காகத்திற்கு வைத்துவிட வேண்டும்.

crow feeding

இந்த வழிபாட்டை காலை 12 மணிக்குள் செய்துவிட வேண்டும். அதன் பின்புதான் வீட்டில் இருப்பவர்கள் உணவு அருந்த வேண்டும். காலையிலிருந்து வெறும் நீராகாரத்தை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது மிகவும் நல்லது. இதேபோல் அமாவாசை தினத்தில் உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு மறக்காமல் திருஷ்டி கழித்து விட வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டு வழக்கப்படி கல் உப்பை வைத்து திருஷ்டி கழித்தாலும் சரி, எலுமிச்சம் பழத்தை வைத்து திருஷ்டி கழித்தாலும் சரி, அல்லது ஆரத்தி, பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தாலும் சரி அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் நாளை திருஷ்டி கழிக்கும் போது கண் திருஷ்டி முழுமையாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

murugar1

பரணி நட்சத்திர முருகர் வழிபாடு:
நாளை தினம் முழுவதும் பரணி நட்சத்திரம் முழுமையாக இருக்கின்றது. நாளை காலை வேளையில் அமாவாசை வழிபாட்டினை முடித்து இருப்பீர்கள். மாலை முருகப் பெருமானை வேண்டி உங்களுடைய வீட்டில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த ஏதாவது ஒரு பிரசாதத்தை வைத்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் முழுமையாக நீக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இதனுடன் குலதெய்வத்தையும் நினைத்து வழிபட மறக்க வேண்டாம்.

praying-god1

நிறைய பேருக்கு வீட்டில் பண கஷ்டம் இருக்கும். திருமணமாகாமல் இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். நல்ல வேலை கிடைக்காமல் இருக்கும். கடன் சுமை, சண்டை சச்சரவு இப்படி மனித பிறவிக்கு இருக்கக்கூடிய எல்லா கஷ்டத்திற்குமே தீர்வு கிடைக்க, நாளை மாலை முருகப்பெருமானை வேண்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும்.

கந்த சஷ்டி கவசத்தை படிக்க முடியாதவர்கள், அதை உங்களுடைய வீட்டில் ஒலிக்கச் செய்து அந்த கந்தசஷ்டிகவசம் முழுவதும் முடியும் வரை, பூஜை அறையில் அமர்ந்து முருகப் பெருமானிடம் வேண்டுதல் வைத்தால், நீங்கள் வைத்த வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும். அந்த முருகப்பெருமானின் அருள் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். நாளை வரக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த இந்த நாளில் முன்னோர்களது வழிபாட்டையும், முருகப்பெருமானது வழிபாட்டையும் செய்து அனைவரும் பலனடைய வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.