உங்களின் நோய்கள் தீர, வளமை பெறுக இம்மந்திரம் துதியுங்கள்

amrutheswari

இந்த உலகில் இயற்கை படைத்த அற்புதங்களில் ஒன்று மனித தேகம் ஆகும். இந்த மனித தேகம் வெறும் உலகியல் சார்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கு மட்டும் உதவாமல், இறைத் தன்மையை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. அப்படிப்பட்ட நமது ஆற்றல் மிக்க மனித தேகம் நோய் நொடிகள் இன்றி இருந்தால் மட்டுமே செல்வம் மற்றும் இறையருள் ஆகிய அனைத்துப் பேறுகளையும் பெற முடியும். அவற்றை ஒரு மனிதனுக்குத் தரும் வல்லமை கொண்ட “ஸ்ரீ அம்ருதேஸ்வரி தேவி” காயத்ரி மந்திரம் இதோ

MathuraKaliamman

அம்ருதேஸ்வரி தேவி காயத்ரி மந்திரம்

ஓம் சௌஹ் த்ரிபுர தேவி வித்மஹே
சக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

அம்மனின் பல வடிவங்களில் ஒன்றான ஸ்ரீ அம்ருதேஸ்வரி தேவியின் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் துதிப்பது மிகவும் நன்மை பயக்கும். அதிகாலை வேலையான 4 முதல் 5 மணிக்குள்ளாக எழுந்து, குளித்து முடித்துவிட்டு கிழக்கு திசையை பார்த்து நின்றவாறு அம்ருதேஸ்வரி தேவியை மனதில் நினைத்துக் இந்த மந்திரத்தை 27 அல்லது 108 முறை தினமும் துதிப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எத்தகைய நோய் நொடிகளும் உங்களை எளிதில் அண்டாது. ஏற்கனவே உடலில் இருக்கும் நீண்டகால நோய்கள் விரைவில் நீங்கும். வளமை பெருகும்.

Amman silai

அமிர்தம் என்றால் ஒருவருக்கு இறவா வரம் தரக்கூடிய ஒரு உணவு என நமது புராணங்களில் கூறப்படுகிறது. இந்த அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் அவர்கள் என்றென்றும் இறவா தன்மையை பெற்றனர். இதன் காரணமாக தான் அமிர்தத்தை தேவாமிர்தம் என அழைக்கிறோம். அந்த அமிர்தத்தின் அம்சமாக இருப்பவர் தான் அம்ருதேஸ்வரி தேவி. அந்த தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை துதிப்பவர்களுக்கு சிறந்த பலன்கள் நிச்சயம் உண்டு.

இதையும் படிக்கலாமே:
பகை தீர்க்கும் சிவ மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Amrutheshwari gayatri mantra in Tamil. It is also called as Amman manthirangal in Tamil or Devi mantras in Tamil or Udal nalam pera manthiram in Tamil.