ஆந்திரா ஸ்டைலில் தக்காளி பருப்பு கடையல் சாப்பிட்டு இருக்கீங்களா? எப்பவும் செய்ற கடையல் மாதிரி இல்லாம புளிப்பு, காரம், எல்லாம் சேர்த்து செம டேஸ்டா இருக்கும். இட்லி, தோசை, சாதம் என எல்லாத்துக்குமே ஒரு பக்கா வான சைடிஷ்.

- Advertisement -

இந்த துவரம் பருப்பை வைச்சி நாம பல வகை சாம்பார் செய்வோம். இதில் டிபன் வகைகளுக்கு ஒரு விதமாகவும், சாப்பாட்டிற்கு ஒரு விதமாகவும் செய்வோம். டிபன் வகைகளிலே கூட இட்லி தோசைக்கு செய்யும் விதம் வேறு, பொங்கல் போன்றவைக்கு வேறு விதமாக செய்வோம். இப்படி சாம்பாரிலே பலவகை உண்டு. இந்த சமையல் குறிப்பு பதிவிலும் நாம் துவரம் பருப்பை வைத்து தான் செய்யப் போகிறோம் ஆனால் நாம் வைக்கும் இந்த சாம்பார்களை போல இல்லாமல் இதை ஆந்திரா ஸ்டைலில் கொஞ்சம் காரமாக அதே நேரத்தில் புளிப்பும் சேர்த்த ஒரு பருப்பு கடையிலை தான் பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆந்திரா ஸ்டைல் தக்காளி பருப்பு கடையல் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு -1 கப், வெங்காயம் -1, தக்காளி -3, பச்சை மிளகாய்- 4, பூண்டு பல் -10,மிளகாய் தூள் -1 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், கடுகு -1டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், நெய் -1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி – 1 கைப்பிடி.

- Advertisement -

ஆந்திரா ஸ்டைல் தக்காளி பருப்பு கடையில் செய்முறை விளக்கம்:
இந்த தக்காளி கடையல் செய்வது மிக மிக சுலபம். பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி அதை குக்கரில் சேர்த்து விடுங்கள். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மூன்றையும் அரிந்து சேர்த்து பூண்டு போட்ட பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்த பிறகு பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை இரண்டு விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்.

இன்னொரு புறம் அடுப்பை பற்ற வைத்து சின்ன தாளிப்பு கரண்டி வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்த உடன், காய்ந்த மிளகாய் கருவேப்பிலை போட்டு அதுவும் பொரிந்த உடன் அடுப்பை அணைத்து விட்டு, பெருங்காயத்தூளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது குக்கரை திறந்து பருப்பை லேசாக கடைந்து விடுங்கள். மிக்ஸியில் போட்டு அரைக்க கூடாது. லேசாக கரண்டி வைத்து மசித்தாலே கூட போதும் பருப்பு மசிந்து விடும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து இந்த குக்கரை அடுப்பில் வைத்த பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இதன் மேல் தூவிய பிறகு, தாளிப்பையும் இதில் சேர்த்த பின் கொதிப்பதற்கு முன் அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான ஆந்திர ஸ்டைல் தக்காளி பருப்பு கடையல் தயார்.

இதையும் படிக்கலாமே:: இனி கஷ்டப்பட்டு மாவு பிசைந்து, திரட்டி ,மடிச்சு இப்படி எதுவுமே செய்யாம, அஞ்சே நிமிஷத்துல சுட சுட சமோசா ரெடி பண்ணலாம். ஆச்சரியமா இருக்கா வாங்க அது எப்படி என்று பார்க்கலாம்.

இது சாதத்துடன் வெறும் அப்பளம் மட்டும் வைத்து சாப்பிட்டால் கூட அவ்வளவு அருமையாக இருக்கும் . இட்லி, தோசை, பூரி சப்பாத்தி என டிபன் வகைகளுக்கும் இது நன்றாக இருக்கும் செய்வது மிக மிக சுலபம் நீங்களும் உங்க வீட்டில் இந்த தக்காளி பருப்பு கடையலை செய்து பாருங்கள்.

- Advertisement -