எல்லோருக்குமே தங்களுடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும், அந்த குடும்பம் சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இன்று வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கனவு என்றால், அது சொந்த வீடு கட்டி குடியேறக்கூடிய விஷயம் தான். இந்த கனவு, கனவாக மட்டும் இருந்துவிடக் கூடாது. அதை நிறைவேற்ற வேண்டும் அல்லவா.
அந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், இன்றைய நாள் இந்த எளிமையான வழிபாட்டை செய்யுங்கள். கனவு நிறைவேற முருகர், செவ்வாய் பகவான், விநாயகர் உங்களுக்கு துணையாக நிற்பார்கள். என்ன செய்யணும்.
அங்காரக சதுர்த்தி வழிபாடு
இன்று மாலை உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகரது திரு உருவப்படத்தையும், முருகர் திருவுருவப்படத்தையும் துடைத்து பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். விநாயகருக்கு அருகம்புல் எருக்கன் மாலை, முருகருக்கு செவ்வரளி பூ, போடுவது மிக மிக சிறப்பு. இதில் எதுவுமே கிடைக்கவில்லை என்றால் கிடைத்த பூக்களை போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். செவ்வாய் பகவானை மனதார நினைத்துக் கொண்டு, விளக்கு ஏற்றி வையுங்கள். 2 வாழைப்பழமோ, 2 கல்கண்டு, 2 பேரிச்சம்பழம், நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைத்தால் போதும்.
மந்திரம் சொல்ல பூஜை அறையில் அமர்ந்து கொள்ளவும். ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொண்டால் சிறப்பு. குலதெய்வத்தை ஒரு நொடி மனதார நினைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய் பகவான் முருகர் விநாயகரின் நினைத்துக் கொள்ளுங்கள். சொந்த வீடு வேண்டும், அந்த வீட்டில் எங்கள் குடும்பம் பல தலைமுறைகளுக்கு சந்தோஷமாக வாழ வேண்டும் விநாயகா என்று பிரார்த்தனை செய்து கொண்டு ‘ஓம் ஹாம் கணேசாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு, பிறகு செவ்வாய் பகவானுக்கு உரிய இந்த மந்திரத்தையும் 27 முறை சொல்லுங்கள்
செவ்வாய் பகவான் மந்திரம்
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
புதன் பகவான் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய வேண்டுதலை நிறைவு செய்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டை நிறைவாக செய்தால் நிச்சயம் உங்கள் சொந்த வீடு கட்டும் கனவு நினைவாக நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்படும்.
இதையும் படிக்கலாமே: தீராத பண கஷ்டத்தை தீர்க்கும் மந்திரம்
உங்களால் கோவிலுக்கு செல்ல முடியும் என்றாலும், கோவிலுக்கு சென்று இன்று விநாயகப் பெருமானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு, அருகம்புல் வாங்கி கொடுத்து, உங்களால் முடிந்த பூ பழங்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். வேண்டுதலை வைக்கலாம். பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் ரொம்ப ரொம்ப முக்கியம். நம்பிக்கையோடு மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறுங்கள்.