தீராத கஷ்டங்களை கூட தீர்த்து வைக்கும் ஆஞ்சநேயர் பரிகாரம்

hanuman

கஷ்டங்கள் என்று வந்துவிட்டால் எந்த இறைவனை வழிபட்டாலும் அந்த கஷ்டமானது தீரும் என்ற நம்பிக்கை நம் எல்லோரிடமும் உள்ளது. ஆனால் அந்த பிரச்சினை எப்படிப்பட்டதாக உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஏதாவது ஒருவகையில் தீயசக்திகள் காரணமாக இருந்தால் அதற்கேற்றார்போல் வலிமை வாய்ந்த, எதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்த இறைவனைத் தான் நாம் வழிபட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அந்த வகையில் அஞ்சாநெஞ்சம் கொண்ட ஆஞ்சநேயரை வழிபடும் போது நமக்கு கெட்ட சக்திகள் மூலம் ஏதேனும் இடையூறுகள் இருந்தால் கூட அது நம்மை விட்டு விலகிச் சென்றுவிடும். நமக்கு வரும் கஷ்டம் இதனால்தான் வந்தது என்று தெரிந்து கொண்டால் அதில் எந்த பயமும் இல்லை. ஆனால் சிலருக்கு கஷ்டம் எதனால் வந்தது என்றே தெரியாது. அவர்களது ஜாதக கட்டத்தில் கூட நேரம் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத சில தீய சக்தியின் காரணமாக பலவிதமான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. எந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபட்டால் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

hanuman

மாதம்தோறும் வருகின்ற நவமி திதி அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட வேண்டும். இந்த பரிகாரத்திற்கு முதலில் பதினோரு அரச இலைகளை பரிகாரம் செய்வதற்கு முன்தினமே தயார் செய்து கொள்ள வேண்டும். சந்தனத்தை சிறிதளவு எடுத்து நன்றாக பன்னீரில் குழைத்துக்கொண்டு அதை விரலால் தொட்டு பதினோரு அரச இலையிலும் ‘ராம்’ என்ற மந்திரத்தை எழுத வேண்டும். பின்பு அந்த 11 இலைகளையும் நன்றாக சுருட்டி மஞ்சள் நிற நூலில் பூ தொடுப்பது போல கட்டிக்கொள்ள வேண்டும். பதினோரு இலைகளும் சேர்ந்து தொடுக்கப்பட்ட மாலையை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் ஆஞ்சநேயரின் திருவுருவப்படத்திற்கு செலுத்திவிட வேண்டும்.

ஒரு சிலரது வீட்டில் ஆஞ்சநேயரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களாக இருந்தால் அனுமன் கோவிலுக்கு சென்று இந்த மாலையை சாதித்து விடலாம். இந்தப் பரிகாரத்தை தொடர்ந்து 11 முறை செய்து வந்தாலே உங்களது கஷ்டத்திற்கான தீர்வு கிடைத்துவிடும்.

hanuman

தனி ஆஞ்சநேயரை வீட்டில் வைக்காதவர்கள் கூட, ராமர் சீதை இவர்களோடு சேர்ந்து இருக்கும் ஆஞ்சநேயர் திருவுருவப் படத்தை வீட்டில் வைப்பது எந்த ஒரு தவறும் இல்லை. அச்சுறுத்தும் ரூபத்தில் இருக்கும் ஆஞ்சநேயரை தான் வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று கூறுவார்கள். அடுத்ததாக ஆஞ்சநேயர் பிரம்மச்சரியம் விரதம் இருப்பதால் அவருக்கும் எந்த ஒரு தீட்டும் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டில் வைத்து வழிபட கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். தவிர வேறு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே
உங்களது கனவில் இறைவன் தோன்றினால் என்ன பலன் என்று உங்களுக்கு தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Anjaneyar valipadu Tamil. Hanuman valipadu Tamil. Hanuman vazhipadu secrets. Hanuman pariharam Tamil.