மாலை விளக்கு வைத்த பின்பு, இந்த 1 பொருளை மட்டும் தாராளமாக தானம் கொடுக்கலாம். வீட்டில் செல்வ கடாட்சம் செழிக்க, இரவில் நாம் கொடுக்க வேண்டிய அந்த தானம், எந்த தானம்?

dhaanam

பொதுவாகவே மாலை 6 மணிக்கு மேல் விளக்கு வைத்த பின்பு நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருட்களை அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்க கூடாது என்று தான் சொல்லுவார்கள். ஆனால், சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள கரமான பொருட்களை விளக்கு வைத்த பின்பு தானம் கொடுக்கலாம் என்று சாஸ்திரம் சொல்கின்றது. அந்த வரிசையில் விளக்கு வைத்தபின் நம்முடைய வீட்டில் இருந்து எந்த பொருளை அடுத்தவர்களுக்கு தானமாகக் கொடுத்தால், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வீர்கள் என்பது தெரியாது. ஆனால் சாஸ்திரம் சொல்வது இதுதான். விளக்கு வைத்த பின்பும் நாம் அடுத்தவர்களுக்கு இந்த ஒரு பொருளை மட்டும், இல்லை என்று சொல்லாமல் தாராளமாக தானம் செய்யலாம். அந்த ஒரு பொருள் என்ன? நீங்களும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா? வாருங்கள் பார்ப்போம்.

dhanam

தானத்தில் சிறந்த தானம் என்று சொல்லப்படுவது அன்னதானம் தான். அந்த அன்னத்தை வீட்டில் விளக்கு ஏற்றிய பின்பும், நம் வீட்டில் இருந்து அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கலாம் என்று சொல்கிறது நம்முடைய சில சாஸ்திரங்கள். எப்படி? நம்முடைய வீட்டில் வடித்து வைத்திருக்கும் வெள்ளை சாதத்தை, பசி என்று கேட்டு வருபவர்களுக்கு தானம் கொடுக்கலாம். ஆனால், அதே சாதத்தில் உப்பு சேர்த்து சாதம் வடித்திருந்தால், உப்பு சேர்த்த அந்த சாதத்தை நாம் அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கும் போது நம் வீட்டில் இருக்கும் ஐஸ்வரியம் வெளியே செல்லப் படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் பசியென்று வந்தவர்க்கு இல்லை என்று நம்மால் சொல்ல முடியாது. அது நமக்கு பாவத்தைச் சேர்க்கும். உங்களுடைய வீட்டிற்கு பசி என்று யாரேனும் வந்தால் உங்கள் வீட்டிலேயே அமரச் செய்து அந்த சாதத்தை பரிமாறலாம். அதில் தவறொன்றும் கிடையாது. வீட்டில் விளக்கு வைத்த பின்பும் சரி, நம் வீட்டிற்கு பசி என்று வந்தவர்களை இல்லை என்று சொல்லி அனுப்பவே கூடாது. இது பெரிய பாவமாக சொல்லப்பட்டுள்ளது.

annadhanam 1

சரி, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வயது முதிர்ந்தவர்கள் யாரோ ஒருவர் உங்களிடம் விளக்கு வைத்த பின்பு மாலை 6 மணிக்குப் பிறகு பசி என்று வந்து கேட்கிறார்கள். சாதத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். சாதத்தில் உப்பு போட்டு வடிக்கவில்லை. அந்த உப்பு போடாத வெறும் சாதத்தை மட்டும் அவர்களுக்கு கொடுத்தால் அதன் மூலம் ஏதேனும் பிரயோஜனம் உண்டா? உப்பு போடாத சாதத்தை, வெறும் சாதத்தை அவர்களால் சாப்பிட்டு பசியாற முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்.

- Advertisement -

உங்களிடம் இருக்கும் குழம்பை அன்னலட்சுமியான அந்த சாதத்தோடு சேர்க்காமல், தனியாக கொடுத்துவிடுங்கள். உப்பு சேர்க்காத சாதத்தை கொடுப்பதன் மூலம் அவர்களால் பசியாற முடியாது. அன்னலட்சுமியோடு உப்பு சேர்க்காமல், வெறும் சாதத்தை தானம் கொடுத்துவிட்டு குழம்பை தனி பாத்திரத்திலோ அல்லது கவரிலோ உங்கள் விருப்பம் போல் கட்டி கொடுத்து விடுங்கள்.

vasthira-dhanam

ஆனால் சாதத்தோடு மட்டும் உப்பு சேர்த்து இரவு நேரத்தில் தானம் செய்யக்கூடாது. உப்பு சேர்க்காத சாதத்தை தாராளமாக அடுத்தவருக்கு தானம் கொடுப்பதன் மூலம், வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள குறிப்பு தான் இது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதுவுமே கிடையாது.

annathanam

எந்த ஒரு தானத்தை நாம் செய்வதாக இருந்தாலும் நம்முடைய மனதில் ஒரு துளி அளவுகூட சஞ்சலம் இருக்கக்கூடாது. இந்த தானத்தை செய்வதன் மூலம் நமக்கு கஷ்டம் வந்து விடுமோ என்று நினைத்துக்கொண்டே தானம் கொடுத்தால் கஷ்டம் வருவது உறுதி. இந்த தானத்தை கொடுப்பதன் மூலம் நமக்கு ‘நன்மை தான் நடக்கும்’ என்று உறுதியாக நம்பிக் கொண்டு தானம் செய்தால் அதன் மூலம் உங்களுக்கு நன்மையே நடக்கும் என்பதும் உறுதி. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழ்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது என்பதும் சாஸ்திரங்கள் வலியுறுத்தியது தான். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.