குழந்தைக்கு அன்னபிரசன்னம் சடங்கு எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

நமது வம்சத்தை தொடரச் செய்வது நமது வாரிசாகிய குழந்தைகள் தான். அவர்கள் வாழ்வில் பல நலங்களையும் பெற அவர்களுக்கு ஆரோக்கியமான உடல் இருப்பது அவசியம். சிறந்த, சத்துமிக்க உணவை குழந்தைகளுக்கு தருவதால் ஆரோக்கியமான உடல்நிலை இருக்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் அருளும் குழந்தைளுக்கு இருந்தால் எத்தகைய கொடிய நோய்களும் அவர்களை அண்டாது. அப்படி இறைவனின் ஆசிகளோடு குழந்தை பிறந்து முதலாவது திட உணவை ஊட்டும் சடங்கு தான் “அன்னபிரசன்னம்”. தமிழ் மொழியில் இதை சோறு ஊட்டும் சடங்கு என கூறுவர். இந்த அன்னப்பிரசன்னம் சடங்கை எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு முதலாவது திட உணவை தெய்வங்களின் ஆசிகளோடு குழந்தைகளுக்கு ஊட்டும் இந்த அன்னப்பிரசன்னம் நிகழ்வும் மற்ற சுப சடங்குகளை போலவே நாள் செய்ய வேண்டும். குழந்தையின் பிறந்த ஆரவாடாது மாதத்தில் செய்ய முடியாதவர்கள், குழந்தை பிறந்த 8, 9 அல்லது 12-வது மாதங்களில் ஆடி, மார்கழி மாதங்களை தவிர்த்து அதற்கு அடுத்த சிறந்த மாதங்களில் செய்யலாம். அஸ்வினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் த்விதியை, திருதியை பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகர, கும்பமாகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இச்சடங்கை வேதமறிந்த வேதியர்களை கொண்டும் செய்யலாம்.

குழந்தைக்கு சோறூட்டும் சடங்கிற்கு சிறந்த உணவாக இருப்பது அரிசி கொண்டு செய்யப்படும் பாயசம் ஆகும். இந்த பாயசத்தை வைத்திருக்கும் பாத்திரம் மற்றும் கரண்டி வெள்ளி பாத்திரங்களாக இருப்பது சிறந்தது. பாயசம் குழந்தை ஜீரணம் செய்யும் பக்குவத்தில் தயாரிக்க படவேண்டும். பாயசம் தயாரான பிறகு, வெள்ளி கிண்ணத்தில் அந்த பாயசத்தை ஊற்றி அதில் சிறிது தேன், சிறிது கங்கை நீர், சிறிது துளசி இலைகள், கொஞ்சம் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு சுப நேரத்தில் குழந்தையின் பிறந்த கோத்திரம், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை கூறி, நவகிரகங்களுக்குரிய மந்திரங்களை துதித்து, “ஓம் பூ : ஓம் புவஹ : ஓம் ஸுவஹ : ஓம் புவஹ ஸுவஹ :” என்ற மந்திரம் துதித்து, குழந்தையின் பெயரை கூறி வெள்ளி கரண்டியில் சிறிது பாயசத்தை எடுத்து குழந்தையின் தாய் ஊட்ட வேண்டும், பிறகு குழந்தையின் தந்தை இதர உறவினர்களும் குழந்தைக்கு ஊட்டலாம். குழந்தைக்கு சில கரண்டிகளுக்கு மேல் சாப்பிட விருப்பமில்லை என்றால் கட்டாயப்படுத்தி ஊட்டக்கூடாது.

- Advertisement -

இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் குழந்தைக்கு வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களை அன்பளிப்பாக வழங்குவது சிறப்பானதாகும். இது முடியாதவர்கள் குழந்தைக்கு புத்தாடைகளை பரிசாக வழங்கலாம். புண்ணிய நதியான கங்கை நீர், துளசி, தேன் போன்ற மருத்துவ மற்றும் ஆன்மீக ஆற்றல் கொண்ட பொருட்களை கலந்த உணவை குழந்தைக்கு ஊட்டுவதால் குழந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, இறைவனின் ஆசிகளால் நீண்ட ஆயுளும், நோய்கள் அண்டாத வாழ்வும் அக்குழந்தைக்கு உண்டாகிறது.

இதையும் படிக்கலாமே:
நந்தா விரதம் அனுஷ்டிக்கும் முறை மற்றும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Annaprasana procedure in Tamil. It is also called Annaprasana mantra in Tamil or Soru oottum function in Tamil or Annaprasanam seivathu eppadi in Tamil or Kulandhaiku soru ootudhal in Tamil or Kulandhai sadangugal in Tamil.