தோட்டத்தில் ஏன் எறும்புகள் வருகிறது? எறும்பு தொல்லை தீர 1 பைசா செலவே இல்லாமல் இத மட்டும் செஞ்சி பாருங்க!

ants-in-plants

நம் தோட்டத்தில் இருக்கும் செடிகளில் எப்போதும் எறும்புகள் தொல்லை தந்து கொண்டே இருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த எறும்புகள் எல்லாம் ஏன் செடிகள் வைத்திருக்கும் இடங்களில் வருகிறது? எறும்புகள் பொதுவாக இனிப்புகளை நாடி ஓடிவரும். ஆனால் செடிகளை நோக்கி வருவதற்கு என்ன காரணம்? அதற்கு அங்கே என்ன தேவைப்படுகிறது? இந்த எறும்புகளை எல்லாம் எப்படி ஒழிப்பது? இதற்காக நீங்கள் பெரிதாக ஒன்றும் செலவு செய்ய தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் இந்த ஐந்து பொருட்களை வைத்தே எறும்புகளை எளிதாக ஓட செய்து விடலாம். அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ants-in-vegetable-plant

நாம் வளர்க்கும் ரோஜா, மல்லி, செம்பருத்தி, அரளி அல்லது காய்கறி செடிகள் என்று எந்த வகை செடிகளை வளர்த்து வந்தாலும், செடிகளில் பூச்சிகள் தொந்தரவு நிச்சயம் இருக்கும். நாம் இயற்கை பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும் பொழுது அது நமக்கு நன்மையை செய்யும். ரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் பொழுது செடிகள் தங்களுடைய வளர்ச்சிக்குரிய சத்தை இழக்கின்றன. அதில் பெரும்பாலும் மாவுப்பூச்சிகள், அஸ்வினி பூச்சிகள் செடிகளை சேதப்படுத்துகின்றன. பூச்சிகளை தேடி தான் எறும்புகளும் வருகின்றன.

என்னங்க கேக்குறதுக்கு ஆச்சரியமா இருக்கா? ஆமாம் இவ்வகை பூச்சிகள் இலைகளில் இருக்கும் சாற்றை உறிந்து கொண்டு அதன் கழிவுகளை அதிலேயே வெளியேற்றிவிடும். அந்தக் கழிவுகளில் இருக்கும் குளுக்கோஸ் சத்து இனிப்பு மிக்கவையாக இருக்கும். அதன் காரணமாகவே அதைத்தேடி எறும்புகளும் ஏராளமாக வருகின்றன. எறும்புகள் ஏன் வருகின்றன என்பதை நாம் இப்போது தெரிந்து கொண்டோம். இத்தகைய எறும்புகளை எப்படி விரட்டுவது? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்ப்போம்.

ants-in-plants2

இதற்காக நீங்கள் எந்த செலவும் செய்யத் தேவையில்லை உங்கள் வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை கொண்டு எளிதாக எறும்புகளை விரட்ட முடியும். இதற்கு ஐந்து பொருட்கள் தேவைப்படுகின்றன. அது எந்தெந்த பொருட்கள் என்று இனி பார்ப்போம்! முதலில் வினிகர் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் 10ml வினிகர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு பெருங்காயத் தூளை எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு வடிகட்டி விடுங்கள். அந்த நீரையும் ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து விடுங்கள்.

- Advertisement -

பட்டை தூள், கிராம்புத்தூள், மஞ்சள் தூள் இந்த மூன்றில் ஏதேனும் ஒரு தூளை எறும்புகள் வரும் இடங்களில் இலைகளின் மீது தூவி விடுங்கள். அதன் வேர் பகுதியிலும் புற்று கட்டியிருக்கும். அங்கேயும் தூவி விடுங்கள். இப்போது அதன் மீது ஸ்பிரே பாட்டிலில் கலந்து வைத்திருக்கும் கலவையை எல்லா இடங்களிலும் ஸ்ப்ரே செய்து விடுங்கள். எந்த ரசாயன கலப்படமும் இல்லாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எறும்புகளை இருந்த இடம் தெரியாமல் இது அழித்து விடலாம். ஒரு எறும்பு கூட உங்கள் செடிகளை இனி பாதிக்க செய்யாது. 5 இல் 5 ஐயும் உபயோகிக்க வேண்டும் என்றில்லை. எது உள்ளதோ அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

plants-spray

இப்படி நாம் செய்வதால் எறும்புகள் மட்டுமல்ல, எறும்புகள் தேடி வரும் பூச்சிகளும் ஒழிந்துவிடும். பூச்சி தொந்தரவுகள் இன்றி செடிகள் செழித்து பசுமையாக வளரும். எறும்புகள் எப்போதும் சுறுசுறுப்பானவை, தன் தேவையை தானே பிறர் உதவியின்றி செய்துகொள்ளும். எறும்பு வகைகளில் சிவப்பு நிறத்தில் இருக்கும் எறும்புகள் வெண்டைக்காய் போன்ற காய்கறி செடிகளில் காய்கறிகளை உண்பதற்கு தேடிவரும். இது பூச்சிகளுக்காக வருவதில்லை. நீங்கள் செடிகள் வளர்க்க ஆரம்பிக்கும் பொழுது இலைகள் துளிர்விட்டதும், அதில் வேப்பெண்ணையை ஸ்ப்ரே செய்து வந்தால் பூச்சிகள் எறும்புகள் போன்ற எந்த தொந்தரவுகளும் உங்களுக்கு எப்போதும் வராது. வந்தபின் இந்த எளிய முறையில் நீங்கள் அவற்றை விரட்டி விடலாம். செய்து பார்த்து பலன் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
எதையெல்லாம் கெட்டது என்று ஒதுக்கி வைத்து விடுகின்றோமோ, அவையெல்லாம் நமக்கு நன்மை தரக்கூடியவை தான்! அவற்றில் சில உங்களுக்காக!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Black ant problem in garden. Ants in my plants. Ants problem in garden. Erumbu thollai neenga. Erumbu thollai in Tamil.