ஏப்ரல் மாத ராசிபலன் 2021 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் எதிலும் நிதானத்துடன் செயலாற்ற வேண்டியது அவசியமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளில் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்து கொள்வது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு உபத்திரவம் ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சிறுசிறு தோல்விகளை காண்பீர்கள், எனினும் சீரான முன்னேற்றம் இருக்கும் எனவே கவலைப்பட தேவையில்லை. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை எளிதாக சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கியம் குறித்த கவனம் தேவை. பெண்களுக்கு தனலாபம் பெருகும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வர நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்
Rishabam Rasi

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் மேலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகள் சுமையாக வந்து நிற்கும் என்பதால் கூடுமானவரை அதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் சீராக இருக்கும். பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் நன்மைகள் பிறக்கும்.

மிதுனம்
midhunam

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் மிகுந்த நற்பலன்களை காண இருக்கிறீர்கள். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய அற்புதமான அமைப்பாக இருப்பதால் எதிலும் வீர நடை போடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த சாதுரியம் தேவைப்படும். எதிலும் கழுகுப் பார்வையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் குறித்த விசயங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் அதிகரிக்கும். தினந்தோறும் லலிதா சஹஸ்ரநாமம் படித்து வர நன்மைகள் பிறக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசியில் பிறந்தவர்கள் குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமையை கையாள்வது நல்லது. தேவையில்லாத உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். மற்றவர்களிடம் எளிதாக பாராட்டுகளை பெற்று விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி சிறப்பான ஒரு முன்னேற்றம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்பட கூடும் என்பதால் உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி பூஜை செய்வது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

சிம்மம்
simmam

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் எதிலும் வெற்றி காண கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வாக்குவாதங்கள் வலுவாகும் என்பதால் கூடுமானவரை அவற்றை தவிர்த்து விடுவது நல்லது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பெண்கள் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் வாய்ப்பு அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் திடீர் பயணங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்துவர நன்மை உண்டாகும்.

கன்னி
Kanni Rasi

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு மற்றவர்கள் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். எனினும் உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய விஸ்வரூப வெற்றி அடைய கூடிய நாள் விரைவில் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இதுவரை நிலுவையில் இருந்து வந்த கடன் தொகைகளை வசூல் செய்து விடுகிறார்கள். பெண்களுக்கு சுய தொழில் புரியும் வாய்ப்புகள் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம். நவகிரக வழிபாடு செய்வது நன்மை தரும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை கற்று வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்து வந்த பகைவர்களின் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை சாதகமான பலன்களை காணலாம். பெண்கள் இறை வழிபாடுகளில் ஆர்வத்தை அதிகமாக செலுத்துவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வந்தால் தடைகள் விலகும்.

விருச்சிகம்
Virichigam Rasi

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மாதம் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத்தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்ட யோகம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய தொடர் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் கிடைக்க வேண்டிய அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுயநலத்தை விடுத்து பொது நலத்தோடு சிந்தித்தால் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வீட்டில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு விளக்கு ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.

தனுசு
Dhanusu Rasi

தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் ஏற்ற இறக்கமான பலன்களை காண்பீர்கள். திடீரென அதிர்ஷ்டமும், திடீரென தோல்வியும் உண்டாகும். மற்றவர்களுக்கு கடன் உதவி செய்யும் பொழுது மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணியில் கூடுதல் பொறுப்புகளை சுமக்க வாய்ப்புகள் உண்டு. தேவையான ஓய்வை அடிக்கடி எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. பெண்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை பெறுவீர்கள். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் சாதகப் பலன் உண்டு. சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் உங்களுடைய பலம் எது? பலவீனம் எது? என்பதை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். வாடிக்கையாளர்களை கவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாகும். பெண்கள் குழப்ப நிலையில் இருந்து விடுதலை பெற்று தெளிவான சிந்தனை பெறுவீர்கள். தினந்தோறும் காலையில் சூரிய வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசியில் பிறந்தவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. சகோதர சகோதரிகளின் ஒற்றுமையில் இருக்கும் குறைபாடுகள் நீங்கும். திடீர் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வீடு, மனை வாங்கும் முயற்சியில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். பெண்கள் அதிக பொறுமையை கையாள்வது நல்லது. அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி வரலாம் நன்மை செய்யும்.

மீனம்
Meenam Rasi

மீன ராசியில் பிறந்தவர்கள் இம்மாதம் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. யாருக்கும் முன் ஜாமீன் கையெழுத்து போடுவது தவிர்ப்பது உத்தமம். எந்த ஒரு செயலையும் செய்யும் முன்னும் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. திருமண யோகம் கைகூடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேல் அதிகாரிகளின் தொந்தரவு வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பங்குதாரர்களின் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பேச்சில் இனிமை இருந்தால் மனதில் இருக்கும் பாரங்கள் குறையும். பெண்களுக்கு துணிச்சல் பிறக்கும். பசு மாடுக்கு அகத்திக்கீரை தானம் செய்ய நல்லது நடக்கும்.