தொலைந்த பொருள் உடனே கிடைக்க இதை மட்டும் செய்தாலே போதும். நீங்கள் இழந்த பொருள், விலை மதிக்க முடியாத பொருளாக இருந்தாலும் அது உடனடியாக கிடைக்கும்.

amman

இன்றைய சூழ்நிலையில் பணம் சேர்த்து, ஒரு பொருளை வாங்குவது என்பதை மிகவும் கடினமான விஷயம். கஷ்டப்பட்டு பணத்தை சேர்த்து அந்த பொருளை நாம் வாங்கி வைத்துக் கொண்டால், அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஒரு பொருளை வாங்குவதை விட, அதை பாதுகாப்பது தான் மிக மிக கடினமான விஷயம். உங்களிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத, தங்க நகைகள் தொலைந்து போனாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லையென்றால் நீங்கள் நீண்ட நாட்களாக பொக்கிஷமாக பாதுகாத்து வந்த, ஏதாவது ஒரு பொருள் உங்கள் கையை விட்டு சென்று இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

gold-bracelet

நீங்கள் தொலைத்த பொருளுக்கும் இந்த பரிகாரம் பொருந்தும். நீங்கள் உங்களை அறியாமலேயே இழந்த விஷயங்களுக்கும் இந்த பரிகாரம் பொருந்தும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். தொலைந்த பொருளை மீட்டெடுப்பதற்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு அரைக்காசு அம்மன் வழிபாடு. பொதுவாகவே சக்தி ரூபத்தில் அவதாரம் எடுத்திருக்கும் எல்லா அம்மன் தெய்வங்களும் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள் தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இருப்பினும் தொலைந்த பொருளை மீட்டெடுப்பதற்கு இந்த அரைகாசு அம்மன் வழிபாடு உடனடியாக நல்ல பலனைக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சரி, இந்த அரைக்காசு அம்மனை நினைத்து தொலைந்த பொருளை மீட்டெடுக்க எப்படி பிரார்த்தனை செய்து கொள்வது. ஒரு மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து முடிந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் அரைக்காசு அம்மனை நினைத்து வைத்துவிட வேண்டும்.

amman1

தொலைந்த பொருள் சீக்கிரமே கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்குள்ளேயே ஏதாவது ஒரு முக்கியமான பொருளை தொலைத்திருந்தால், இந்த வேண்டுதல் வைத்த மூன்றாவது நாளே அந்தப் பொருள் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

வெளியிடங்களில் உங்களை அறியாமலேயே உங்களிடம் இருக்கும் விலை மதிப்பு மிக்க பொருட்களை, நீங்கள் தொலைத்து இருந்தாலோ, அப்படி இல்லை என்றால் அந்த பொருள் திருடு போய் இருந்தாலோ, அதை மீட்டு எடுக்கவும் இந்த ஒரு ரூபாயை முடிந்து வைத்து வேண்டிக் கொள்ளலாம். நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் நீங்கள் இழந்த அந்த பொருள் விரைவாகவே உங்கள் கையை வந்து நிச்சயமாக சேரும். ஆனால் வெளியிடங்களில் தொலைத்த பொருள், இத்தனை நாட்களுக்குள் கிடைத்துவிடும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நம்பிக்கையோடு செய்த பல பேர் இந்த பரிகாரத்தின் மூலம் பலன் அடைந்து உள்ளார்கள் என்பது மட்டும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

one rupee

உங்களால் முடிந்தால், முடிந்து வைத்திருக்கும் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டுபோய் அரைக்காசு அம்மன் கோவில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். அந்த கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், முடிந்து வைத்திருக்கும் ஒரு ரூபாய்க்கு, கற்பூரத்தை வாங்கி உங்களுடைய வீட்டிலேயே அரைக்காசு அம்மனை நினைத்து ஏற்றிவிட வேண்டும்.

amman2

சென்னை வண்டலூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரத்தினமங்கலம் என்னும் ஊரில் தான் இந்த அரைக்காசு அம்மன் கோவில் இருக்கின்றது. சென்னையில் இருப்பவர்களால் கட்டாயம் இந்த கோவிலுக்கு செல்ல முடியும். மற்றபடி தொலைவில் உள்ளவர்களால் நினைத்தபோது கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்ய முடியாது அல்லவா? மனதார நினைத்து வீட்டிலிருந்தபடியே பிரார்த்தனை செய்து கொண்டாலே இழந்த பொருளை அந்த அம்மன் சீக்கிரமே மீட்டு தந்து விடுவாள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.