அசைவம் சாப்பிடுகிறவர்கள் கூட இனி அசைவத்துக்கு பதில் இந்த பன்னீர் கிரேவிய தான் சப்பாத்தி பூரி பரோட்டாவிற்கு எல்லாம் சைடிஷா கேப்பாங்க, அந்த அளவுக்கு செம டேஸ்ட்னா சிம்பிள் கிரேவி ரெசிபி இது.

- Advertisement -

சைவ சாப்பாட்டை விரும்பி உண்பவர்களுக்கு எல்லாம் இந்த பன்னீர், மஷ்ரூம் இதெல்லாம் மிகப் பெரிய ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். அசைவம் வைத்து சமைக்கும் பல சமையல்களை அதே சுவையுடன் மனத்துடனும் செய்ய இந்த இரண்டு பொருட்களும் இருந்தாலே போதும். அந்த வகையில் நல்ல ஒரு பன்னீர் கிரேவியை அசைவ சமையல் விட மிஞ்சும் சுவையிலே இதை செய்து விடலாம். அந்த பன்னீர் கிரேவியை எப்படி செய்வது என்பதனை பற்றிய குறிப்பு பதிவு தான் இது. வாங்க அந்த பன்னீர் கிரேவி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க.

தேவையான பொருட்கள்: பன்னீர் -200 கிராம், வெங்காயம் – 3, பூண்டு- 10 பல், இஞ்சி – 2சிறிய துண்டு, தக்காளி – 3, காஷ்மீரி மிளகாய் தூள் -1 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், தயிர் -1/4 கப், மல்லித்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன், கரம் மசாலா -1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், பிரியாணி இலை, கல்பாசி- 2, சோம்பு -1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

இதற்கு முதலில் வெங்காயத்தை பெரிதாக நறுக்கி அதை எண்ணையில் நல்ல பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். வதக்கிய வெங்காயத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதே எண்ணெயில் பூண்டு, இஞ்சி துண்டையும் சேர்த்து அதையும் நன்றாக வதக்கி எடுத்து வெங்காயத்துடன் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இது அப்படியே இருக்கட்டும்.

இப்போது அதே ஜாரில் தக்காளியையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்ததாக வெங்காயம் வதக்கிய அதே எண்ணெயில் பட்டை, லவங்கம், கல்பாசி ,ஏலக்காய், சோம்பு எல்லாம் சேர்த்து தாளித்த பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூ,ள் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். இதை எண்ணெயில் வதக்க காரணம் அப்போது தான் இந்த கிரேவி நல்ல கலர்ஃபுல்லாக இருக்கும். எண்ணெயில் இந்த மசாலா வதங்கிய பிறகு அரைத்த தக்காளி அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இரண்டும் நல்ல வதங்கிய பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த வெங்காய பேஸ்டையும் இதில் சேர்த்து கால் கப் தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அதில் மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து பிறகு பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி அதையும் இதில் சேர்த்து பிறகு பச்சை மிளகாயை அதில் கீறி சேர்த்து கொள்ளுங்கள் அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து மூடி போட்டு வைத்து விடுங்கள். ஐந்து நிமிடம் வரை கொதித்தாலே போதும் இந்த கிரேவி நல்ல ஒரு பதத்திற்கு வந்து விடும்.

அவ்வளவு தான் சுவையான பன்னீர் கிரேவி தயார். எது சப்பாத்தி, பூரி , நாண், பரோட்டா என எல்லாவற்றிக்கும் ஒரு பக்காவான சைடு டிஷ்.

- Advertisement -