அரண்மனை கிளி ப்ரோமோ சுவாரஸ்யங்கள்

Aranmanai kili

விஜய் டீவியில் ஒளிபரப்பப்படும் அரண்மனை கிளி சீரியல், தற்போது பலரும் பார்க்கும் ஒரு சீரியலாக மாறி உள்ளது. அதன் அடுத்தடுத்த ப்ரோமோ விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த வகையில் இன்று விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ப்ரோமோ இதோ.

அர்ஜுன் ஜானு மீதும் ஆரம்பத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும். தற்போது அர்ஜுனுக்கு ஜானு மேல் காதல் மலர்வது போல உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையிலே இன்றைய ப்ரோமோ வீடியோ உள்ளது. ஜானுவுக்கு கணத்தில் ஏதோ சிறியதாக காயம் ஏற்பட அதற்காக ஜானு அழுகிறாள். உடனே அர்ஜுன் அதற்கு மறந்தாய் போடுகிறார். அதை சற்றும் எதிர்பாராத ஜானுவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. ரொம்ப வலிக்கிறதா என்று அர்ஜுன் கேட்க அதற்க்கு இல்லை என்று கூறுகிறார் ஜானு. இந்த நிகழ்வை மைனா ஜன்னல் வழியாக பார்க்கிறார். இதற்கான வீடியோ மேலே உள்ளது.

அர்ஜுன் மற்றும் ஜானு ஆகிய இருவரும் ஒன்று சேர வேண்டும் என்கிற எண்ணம் அந்த வீட்டில் மைனாவிற்கு மட்டுமே உள்ளது. ஆகையால் அவர்கள் இருவரும் அன்பாய் இருப்பது மைனாவிற்கு நிச்சயம் மகிழ்வையே தரக்கூடியதாக இருக்கும். கடந்த வாரம் முழுவதும் ஜானு ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்ததும் அர்ஜுன் அவளுக்கு துணையாக இருந்ததையும் நாம் பார்த்தோம். இப்போது இருவரின் அன்பும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.