அரண்மனை கிளி : மீனாட்சி வீட்டில் Vijay TV சின்னத்தம்பி

Aranmani kili

அரணமனை கிளி சீரியலில் அர்ஜுனின் கால்கள் குணமாவதாக ஜானு ஒரு வைத்தியரிடம் சென்று வருவது பற்றி நாம் அறிந்ததே. அந்த வைத்தியர் இப்போது அர்ஜுனனை சின்னாளப்பட்டி அம்மன் கோயிலிற்கு கூடி செல்லும்படி ஜானுவிடம் கூறுகிறார். அதற்கு ஜானு, நான் கூப்பிட்டால் அவர் எப்படி வருவார் என்று கூறுகிறார். உடனே அந்த ஆன்மீக வைத்தியர் கூறுகிறார். அந்த வேப்பிலை காரி உனக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உதவி செய்வாள் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் தான் சின்ன தம்பி சீரியலில் நடிக்கும் சின்ன தம்பி மற்றும் நந்தினி ஆகிய இருவரும் மீனாட்சி வீட்டிற்கு வந்து அறுபதாம் கல்யாணத்திற்காக மீனாட்சி குடும்பத்தை அன்போடு அழைக்கின்றனர். கல்யாணம் கோயமுத்தூரில் தானே என்று மீனாட்சி சின்ன தம்பியிடம் கேட்கிறார். அதற்க்கு சின்ன தம்பி கூறுகிறார், இல்லமா கல்யாணம் சின்னாளபட்டியில் என்கிறார். இதை கேட்டு ஜானு பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்.

சின்னத்தம்பியின் மனைவி பெரிய இடது பெண் என்பதால், நந்தினிக்கு இதற்க்கு முன்பே மீனாட்சி குடும்பத்தை தெரிந்திருக்கலாம். அதனாலேயே அவர்களை அறுபதாம் கல்யாணத்திற்கு வரவேற்க அவர்கள் இருவருமே வந்திருக்கலாம். அல்லது சின்னத்தம்பி குடும்பத்திற்கு மீனாட்சி ஏதாவது ஒரு வகையில் உறவோ அல்லது ஊரில் மிக முக்கியமானவர் என்ற முறையிலோ அவர்கள் இவர்கள் வரவேற்றிருக்கலாம். அவர்களுக்கு மீனாட்சி குடும்பத்தை எப்படி தெரியும் என்பதை நான் இன்று சீரியல் பார்த்தல் தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.