அர்ச்சனை பூவில் இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கிறதா? தெரியாமல் கூட இதை மட்டும் இனி செய்து விடாதீர்கள்!

archanai
- Advertisement -

எல்லா பூக்களும் இறைவனுக்கு மாலையாக போவதில்லை. ஒரு சில பூக்கள் மட்டுமே அதற்குரிய தகுதியை பெறுகின்றன. ஓரறிவுள்ள மலருக்கு அப்படி என்றால் ஆறறிவுள்ள மனிதனுக்கு என்ன நியதி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். அது போல் தான் மனிதர்களும், அவரவரின் எண்ணத்திற்கு ஏற்ப அவர்கள் இறைவனை அடைய முடிகிறது. இறைவனுக்கு அர்ச்சனை செய்யும் பூக்களில் நிறைய சாஸ்திர சம்பிரதாயங்கள் அடங்கியுள்ளன. மனிதராகிய நாம் அதில் மிகவும் கவனமாக இருக்க சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. அதில் முக்கியமான சிலவற்றை நாம் இப்போது இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

archanai-poo

அர்ச்சனைக்கு பயன்படுத்தப்படும் பூக்கள் அல்லது இலைகள் அழுகிப் போய் அல்லது வாடிப்போய் நிச்சயம் இருக்கக்கூடாது. அதேபோல் பூச்சி கடித்து இருக்கக் கூடாது, பிறர் வாசனை பார்த்திருக்கக் கூடாது, காய்ந்து போய் இருக்கக் கூடாது, பழையதாக இருக்கக்கூடாது, புழு இருந்தால் அதை பயன்படுத்தக் கூடாது, வாசனை இல்லாத பூக்களை அர்ச்சனைக்கு பயன்படுத்தக்கூடாது, பூவில் முடி இருந்தால் அதைக் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது, தீட்டு இருப்பவர்கள் தொடாத பூவாக இருக்க வேண்டும், ஈரத்துணியுடன் சென்று பறித்த பூவாக இருக்கக்கூடாது, கீழே விழுந்த பூக்களை அர்ச்சனைக்கு பயன்படுத்தக்கூடாது என்பது போன்ற விஷயங்களை கவனித்த பின்னரே பூக்களை அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

விஷ்ணு பகவானுக்கு அர்ச்சனை செய்யும் பொழுது எப்பொழுதும் அட்சதை பயன்படுத்தக்கூடாது. விஷ்ணு பகவானுக்கு அர்ச்சனை செய்யும் துளசி இலைகளைக் கொண்டு விநாயகருக்கு கட்டாயம் அர்ச்சனை செய்யக்கூடாது. ஸ்ரீமன் நாராயணனுக்கும் அவரை சேர்ந்த மற்ற தெய்வங்களுக்கும் மட்டுமே துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

thulasi chedi

எம்பெருமான் ஈசனுக்கு மிகவும் உகந்த பூவாக கொன்றை மலர் உள்ளது. கொன்றை மற்றும் தும்பை பூக்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யலாம். வில்வ இலைகளால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வந்தால் இறுதியில் மோட்சம் கிட்டும் என்பார்கள். வில்வத்தை சிவபெருமானுக்கும் அவரை சேர்ந்த மற்ற தெய்வங்களுக்கும் மட்டுமே அர்ச்சனை செய்ய பயன்படுத்த வேண்டும். விஷ்ணுவை சார்ந்த தெய்வங்களுக்கு மற்றும் விஷ்ணுவிற்கு வில்வத்தால் கட்டாயம் அர்ச்சனை செய்யக்கூடாது.

- Advertisement -

நொச்சி இலை, வில்வ இலை, முல்லை, கிளுவை, விளா போன்றவை பஞ்ச வில்வம் எனப்படும். எனவே சிவபெருமானுக்கு பூஜை செய்ய மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது. இவற்றைக் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

vilvam

மாம்பழம், மாதுளை பழம், எலுமிச்சை கனி, புளியம்பழம், கொய்யா பழம், வாழைப்பழம், நாவல் பழம், நெல்லிக்கனி, இலந்தை பழம், பலாப்பழம் போன்ற பழ வகைகள் பூஜையில் வைக்கப்படுவது மிக விசேஷமாக கருதப்படுகிறது. எந்த பூஜை ஆனாலும் இந்த பழங்களை வைத்து வழிபடுவதால் சகல நலமும் கிட்டும் என்பார்கள்.

- Advertisement -

naval-pazham

எப்பொழுதும் அர்ச்சனை செய்யும் பொழுது, ஒரு பூவை எடுத்துக் கொண்டால் முழுவதுமாக அப்படியே போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ்களை ஒவ்வொன்றாக கில்லி அர்ச்சனை செய்யக்கூடாது. அன்றைக்கு பூத்த பூவை அன்றைக்கே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். வில்வம் மற்றும் துளசியை தவிர வேறு எந்த அர்ச்சனைப் பொருட்களையும் ஒருமுறை அர்ச்சனை செய்த பின் மீண்டும் அதை எடுத்து அர்ச்சனை செய்யக் கூடாது. இதில் வில்வம் மற்றும் துளசி விதிவிலக்கு, அவற்றை தாராளமாக மீண்டும் எடுத்து அர்ச்சனை செய்யலாம். அதே போல் தாமரை, நீலோத்பவம் ஆகிய பூஜைக்குப் பயன்படுத்தும் நீரில் தோன்றிய பூக்களை மட்டும் அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.

pavala-malli

சரஸ்வதி தேவியை பவளமல்லி கொண்டு அர்ச்சனை செய்து வழிபட கூடாது. மொட்டாக இருக்கும் எந்த மலரையும் அர்ச்சனைக்கு பயன்படுத்தக்கூடாது. இதில் விதிவிலக்காக செண்பகப்பூ இருக்கிறது. செண்பகப் பூவை மட்டும் மொட்டாக இருந்தாலும் அர்ச்சனைக்கு தாராளமாக பயன்படுத்தலாம். அர்ச்சனைக்கு தேங்காயை உடைக்கும் பொழுது குடுமியுடன் சமமாக உடைத்து அதன் பின்னால் குடுமியை நீக்கிவிட்டு அர்ச்சனைக்கு நிவேதனம் செய்ய வேண்டும். முதலிலேயே குடுமியை நீக்கிவிட்டு உடைக்கக்கூடாது.

தேங்காய்

மகிழ மர இலை, துளசி இலை, தாமரை இலை, வில்வ இலை, செண்பக இலை, செங்கழுநீர் இலை, மரிக்கொழுந்து இலை, மருதாணி இலை, தர்ப்பை, அருகம்புல், நாயுருவி இலை, விஷ்ணுகிராந்தி இலை, நெல்லி மர இலை போன்ற இலை வகைகள் பூஜைக்கு மிகவும் உகந்தவை ஆக இருக்கின்றன. இவற்றை தவிர வேறு மர இலைகளை பூஜைக்கு பயன்படுத்த கூடாது.

இதையும் படிக்கலாமே
ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -