5 நிமிஷத்துல இப்படி ஒரு போண்டாவை எப்படி செய்வது? டீ டைம் ஸ்னாக்ஸ்.

bonda

ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் படாதபாடு படவேண்டும். ஆனால் இந்த போண்டா செய்வதற்கு, டீ கொதிக்கும் நேரம் போதும். சட்டென சுட சுட போண்டாவை சுட்டு பரிமாறி விடலாம். உங்களுடைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் சுவையான ஆரோக்கியமான போண்டாவை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

wheat-bonda-1

முதலில் அடுப்பில் எண்ணெயை வைத்து காய விட்டு விடுங்கள். எண்ணெய் காய்வதற்குள் போண்டா மாவை தயார் செய்துவிட்டு வந்து விடுவோம். ஒரு அகலமான பவுலில் அரிசி மாவு – 150 கிராம், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், ரவா – 2 டேபிள்ஸ்பூன், தயிர் – 50ml அளவு, தேவையான அளவு உப்பு, இவைகளை போட்டு முதலில் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து தளதளவென வைத்துக்கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீரை ஊற்றி விடாதீர்கள். அதன் பின்பு இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி துருவல், மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன், மல்லித் தழை, கருவேப்பிலை தழை பொடியாக நறுக்கியது. சோடா உப்பு ஒரு சிட்டிகை, இவைகளைப் போட்டு நன்றாக பிசைய்யும் போது மாவு கொஞ்சமாக தண்ணீர் விடும்.

rava-bonda3

இப்போது உங்களுக்கு போண்டா விடும் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, மாவை நன்றாக கரைத்து, கொஞ்சம் சிறிய சிறிய உருண்டைகளாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டியது தான்.

அடுப்பை கொஞ்சம் மிதமான தீயில் வைத்து போண்டா உள்ளே வேகும் வரை சிவக்க வைத்து எடுத்து சுட சுட போண்டா உடன் தேங்காய் சட்னியோடு பரிமாறிக்கொள்ளலாம். மாவை கையில் எடுத்து எண்ணெய் விடும் பக்குவத்திற்கு கொஞ்சம் கெட்டி பதத்தோடு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

rava-bonda1

தெரியாமல் தண்ணீரை ஊற்றி விட்டால், தேவைப்பட்டால் கொஞ்சம் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம். இந்த போண்டா உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.