- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அரிசி மாவு இருந்தால் போதும். 5 நிமிடத்தில் கார்த்திகை தீபத்திற்கு இந்த அப்பம் தயார். ருசியாகவும்...

அரிசி மாவு இருந்தால் போதும். 5 நிமிடத்தில் கார்த்திகை தீபத்திற்கு இந்த அப்பம் தயார். ருசியாகவும் இருக்கும். அதே சமயம் சாஃப்ட் ஆகவும் இருக்கும்.

- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் கார்த்திகை தீபத்திற்கு நிவேதியமாக இந்த கார்த்திகை தீப அப்பம் செய்வார்கள். ஒவ்வொரு வீடுகளில் ஒவ்வொரு மாதிரி இந்த அப்பம் செய்யப்படும். மிக மிக எளிமையான முறையில் அரிசி மாவை வைத்து இன்ஸ்டன்டாக சுவையான அப்பம் செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுடைய வீட்டில் இந்த கார்த்திகை தீபத்தன்று இந்த ரெசிபியை மறக்காமல் முயற்சி செய்து பாருங்கள்.

இதற்கு தேவையான பொருட்களின் முதலில் பார்த்து விடுவோம். அரிசி மாவு – 1 1/2 கப், வெல்லம் – 1 கப், கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், பழுத்த வாழைப்பழம் – 1, ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன், ஆப்ப சோடா – 2 சிட்டிகை. (இடியாப்ப மாவு, கடையில் வாங்கிய பச்சரிசி மாவு, என்று எந்த மாவில் வேண்டுமென்றாலும் இந்த அப்பம் தயார் செய்யலாம். வீட்டில் அரைத்த மாவாக இருந்தால் மாவை ஒரு முறை வறுத்து விட்டு பிறகு அப்பம் செய்ய பயன்படுத்த வேண்டும்.)

- Advertisement -

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் வெல்லத்தை நறுக்கி  போட்டு, 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, வெல்லக் கரைசலை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெல்லம் பாகு காய்ச்ச தேவையில்லை. தண்ணீரில் கரைத்து வைத்துக் கொண்டால் போதும்.

அடுத்து அகலமான ஒரு பௌலில் 1 1/2 கப் அளவு அரிசி மாவு, கோதுமை மாவு 2 டேபிள் ஸ்பூன்,  உப்பு 1 சிட்டிகை, தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன் போட்டு ஏலக்காய் பொடி போட்டு, கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை வடிகட்டி இதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். வெல்லம் கரைத்த தண்ணீர் மட்டும் பத்தாது. இன்னும் 1/2 கப் அளவு தண்ணீரை இதில் ஊற்றி கலக்க வேண்டும்.

- Advertisement -

நன்றாக பழுத்த ஒரு வாழைப்பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அடித்து, இந்த மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். மாவில் கட்டிகள் இருக்கக் கூடாது. கட்டிகள் இல்லாமல் திக்காக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவு இட்லி மாவு விட ஒரு நூல் திக்காக இருக்க வேண்டும். இறுதியாக இரண்டு சிட்டிகை ஆப்ப சோடா மாவை இதில் சேர்த்து நன்றாக கலந்து அப்பம் வார்க்க வேண்டியதுதான். (ஆப்ப சோடா மாவு சேர்க்க விருப்பம் இல்லை என்பவர்கள், மாவை 1 மணி நேரம் புளிக்க வைத்து விட்டு அப்பம் வார்க்க வேண்டும்.)

இதை நீங்கள் குழிப்பணியார கல்லிலும் இனிப்பு பரிகாரம் போல சுட்டு எடுக்கலாம். கடாயில் நிறைய எண்ணெய் வைத்து அதிலும் ஒவ்வொரு அப்பமாக விட்டு பொன்னிறமாக சிவக்க வைத்து எடுக்கலாம். (ஒரு ஸ்பூன் அல்லது குழி கரண்டி பயன்படுத்தி மாவை எண்ணெயில் ஊற்ற வேண்டும்.) எண்ணெய் நன்றாக காய்ந்த பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு அப்பமாக ஊற்றி, உள்ளே வேகும் வரை மிதமான தீயில் பொறித்து எடுத்து பாருங்கள். அப்பம் சூப்பராக வந்துவிடும். இந்த கார்த்திகை தீபத்திற்கு உங்க வீட்ல இந்த அப்பம் தானே.

சற்று முன்