கணவன்-மனைவிக்குள் சண்டை வந்தாலும் வெறுப்பு மட்டும் வந்து விடக்கூடாது! அப்படி உங்களுக்கு வெறுப்பு வந்து விட்டால் இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள் அன்பு பெருக்கெடுக்கும்!

arthanareeswarar-sivan-mantra

கணவன்-மனைவிக்குள் சண்டை வருவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். கணவன் மனைவி சண்டை விவாகரத்து வரை செல்வது தான் வருத்தத்திற்கு உரியது. கணவன் மனைவிக்கு இடையே ஒருமித்த கருத்துகள் இருப்பது என்பது நடக்காத ஒரு விஷயம். கட்டாயம் கருத்துக்கள் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானதாக இருக்கும். உங்களுடைய கருத்துக்களுக்கு செவி சாய்க்காத காரணத்தினால் அவர்கள் மேல் வெறுப்பை உண்டாக்கி கொள்வது முட்டாள்தனம் என்று தான் கூற வேண்டும். இந்த வெறுப்பு மாற இந்த மந்திரத்தை கூறலாம். அதென்ன மந்திரம்? தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.

fight4

கருத்துகள் என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு, கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும், வாழ்க்கையில் இருவருக்கும் இடையில் வேறுபாடு வந்து விடக்கூடாது. உங்கள் கணவன் மீதோ மனைவி மீதோ இருக்கும் அதிருப்தி வெறுப்பாக மாறி விடுவதற்கு முன்னரே இருவரும் தெளிவாக பேசி புரிந்து கொள்ள வேண்டும். பேசி மட்டும் என்ன பிரயோஜனம்? என்று ஒருபோதும் நீங்களாகவே நினைத்துக் கொள்ளக் கூடாது.

நீங்கள் இறுதிவரை வாழப்போவது அவர்களுடன் தான். வாக்குவாதம் நடந்தாலும், சண்டை வந்தாலும் பேசி பேசி தான் உங்கள் தரப்பு நியாயத்தை அவர்களுக்கு புரிய வைக்க முடியும். எனவே சண்டை வருமே என்று பேசுவதற்கு தயங்கி மனதிலேயே போட்டு புழுங்கி கொண்டிருக்காதீர்கள். ஆரம்பத்திலேயே ஒவ்வொரு விஷயத்திற்கும், உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து வைக்காவிட்டால் இறுதியில் நீங்கள் தான் வில்லனாக மாறுவீர்கள்.

fight

ஆரம்பத்திலேயே விட்டுவிட்டிருந்தால் பரவாயில்லை, இப்போதும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு நாளாவது அமர்ந்து, அவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பை புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும். இப்படி செய்தால் நிச்சயம் மாற்றங்கள் நிகழும். எவ்வளவோ சொல்லியாச்சு! திருந்திய பாடில்லை என்று விட்டு விடவும் கூடாது. தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருங்கள். ஒருநாள் மாற்றம் நிகழும். இப்படி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடும், விருப்பு வெறுப்புகளும் இருக்கும் பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்.

- Advertisement -

அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்:
ஓம் ஹும் ஜும் சஹ!
அர்த்தநாரீஸ்வர ரூபே!
ஹ்ரீம் ஸ்வாஹா!!

Arthanareswarar

மேற்கூறிய இந்த அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகத்தை தம்பதியராக பூஜை அறையில் அமர்ந்து திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் ஒன்பது முறை சேர்ந்து உச்சரித்தால் எவ்வளவு மன கசப்புகள் இருந்தாலும் நீங்கிவிடும். முடியாதவர்கள் தனித்தனியாகவும் உச்சரிக்கலாம். இந்த அர்த்தநாரீஸ்வரர் திருஉருவம்! சிவ சக்தியின் ஸ்வரூபம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

sivan-parvathi

கடவுளாக இருந்தாலும் அவர்களும் கணவன் மனைவி தான். சிவன் பார்வதிக்கு இடையே கூட நீ பெரியவனா? நான் பெரியவளா? என்கிற வாதம் நிகழ்ந்துள்ளது என்று புராணங்கள் நமக்கு எடுத்துரைக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் தமிழ் பண்பாட்டில், கணவன் அல்லது மனைவியை பிடிக்கவில்லை என்றதும், இது சரிப்பட்டு வராது என்கிற முடிவை உடனே எடுப்பது மிக பெரிய முட்டாள்தனம். முயன்றால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை.

Arthanareswarar

பெண் இல்லையேல் இவ்வுலகில் உயிர்கள் ஜனிப்பதில்லை. ஆண் இல்லையேல் உயிர்களே இல்லை. ஆக ஆண் பெண் இருவருமே முக்கியமானவர்கள் தான். ஆண் பெண் சமம் என்பது தான் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் நமக்கு ஆணித்தரமாக சுட்டிக் காட்டுகிறது. சக்தியிடம் தோற்றுப் போகும் சிவனும், சிவனிடம் தோற்றுப் போகும் சக்தியும் வாழ்க்கையில் அமோக வெற்றி பெறுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்டாலே கணவன் மனைவிக்குள் பிரச்சனையே வராது.

இதையும் படிக்கலாமே
இந்த 2 எழுத்து மந்திரத்தை இப்படி மட்டும் உச்சரித்து பாருங்கள்! எந்தவிதமான கர்மவினையும், நோய் நொடியும் அண்டவே அண்டாது!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.