மெய் சிலிர்க்க வைக்கும் அர்தநாரிஸ்வரர் நடனம் – வீடியோ

Arthanareswarar dance

உமையவளை தன்னோடு இணைத்து தன் உடலின் சரிபாதியை உமையவளுக்கு தந்து அர்தநாரிஸ்வரர்ராக காட்சி தருகிறார்கள் சிவனும் பார்வதி தேவியும். சிவன் இன்றி சக்தி இல்லை சக்தி இன்றி சிவன் இல்லை என்ற கூற்றை இந்த சிவ வடிவம் மூலம் நாம் அறியலாம். சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியின் வேடம் பூண்ட இருவர் அர்தநாரிஸ்வரர் போல கட்சிதமாக மாறி அழகிய நடனம் ஆடி பார்பவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார். இதோ அதன் வீடியோ.

இந்த நடனத்தை உற்று நோக்கினோமானால் இருவரும் ஒரு கைகளை மட்டுமே உபயோகப்படுத்தியுள்ளனர். அடுத்தவரின் கை அசைவிற்கு ஏற்றவாறு தன்னுடைய ஒரு கையையும் வழிகளையும் அசைத்து மிக மிக அற்புதமாக இந்த நடனத்தை அரங்கேற்றியுள்ளனர். ஒரு கையை அசைக்காமல் வைத்துக்கொண்டு மறு கையையும் கண்களையும் மட்டும் அசைத்து பரதம் ஆடுவது மிக கடினம். அதிலும் மற்றொருவரோடு இணைந்து கட்சிதமாக கை அசைத்து ஆடுவது என்பது மிக மிக கடினம் அதை அசாத்தியமாக இவர்கள் நிகழ்த்தி காட்டியுள்ளனர்.

அர்தநாரிஸ்வரர் இவர்களின் நடனத்தை கண்டால் அவரும் கூட பாராட்டும் வண்ணம் அமைந்துள்ள இந்த பரதம் நிச்சயம் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை.