நீண்ட நாட்களாக உங்களை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரத்தை கூட, ஒரே நாளில் வீட்டை விட்டு அடித்து துரத்தி விடலாம். 1 முறை இந்தப் புகையை போடுங்கள் போதும்.

vinayagar

நம்முடைய வீட்டில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு பல வகையான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் இந்த எதிர்மறை ஆற்றலுக்கு முதலிடம் உண்டு. கெட்ட சக்தியால் உண்டாக்கப்படும் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதாவது கண் திருஷ்டியிலிருந்து ஏவல், பில்லி, சூனியம் வரை எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம் உங்களை பிடித்திருந்தாலும் அதை அடித்து விரட்டி, உங்களுடைய வீட்டை சுத்தப்படுத்தி விடலாம். இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தாலே போதும். இறைவனை வேண்டி ஆன்மீக ரீதியாக செய்யக்கூடிய பரிகாரம் தான் இது. இதை செய்வதற்கு எந்த ஒரு பயமும் தேவையில்லை.

kettasathi-1

வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடி கொண்டால் வீட்டை பிடித்த தரித்திரமும் நிச்சயமாக விலகாது. தொடர் கஷ்டங்களை கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். ஆக வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள், பண கஷ்டங்கள் வந்துகொண்டே இருந்தால் தாமதம் செய்யாமல் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.

முதலில் ஒரு கட்டு அறுகம்புல்லை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளலாம், அல்லது சுத்தமான இடத்தில் இருக்கும் அருகம்புல்லை எடுத்து ஒரு சிறிய கட்டாக கட்டியும் கோவிலுக்கு எடுத்துச் செல்லலாம். விநாயகர் கோவிலுக்கு சென்று நீங்கள் தயார் செய்த அருகம் புல் கட்டை அர்ச்சகரிடம் கொடுத்து விநாயகரின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து கொடுக்க சொல்லுங்கள்.

arugampul-vinayagar

அந்த அருகம்புல் கட்டை கொண்டு வந்து உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த அருகம்புல் நன்றாக உலர்ந்துவிடும். அதன்பின்பு சாம்பிராணி தூபம் போடுகிறார்கள் அல்லவா? அந்த நெருப்பில் இந்த உலர் அருகம் புல்லை போட்டு விட வேண்டும். இந்தப் புகை உங்கள் வீடு முழுவதும் பரவினால் உங்கள் வீட்டை பிடித்த எதிர்மறை ஆற்றல் நீங்கிவிடும்.

வாரம்தோறும் செவ்வாய் கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளில் இந்த தூபத்தை போடலாம். முடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். முடிந்தால் அந்த தூபத்தில் சிறிதளவு வெண் கடுகையும் சேர்த்து கொள்ளுங்கள். வெண் கடைக்கிற்க்கு வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்க கூடிய சக்தி உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான்.

dhupam

வெண்கடுகோடு விநாயகருக்கு உகந்த, விநாயகரின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்த அருகம் புல்லும் சேர்ந்து உங்கள் வீட்டை சுத்தப்படுத்தி விடும். வீட்டில் இருக்கும் தரிதிரம், கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம், போன்ற பல பெரிய பிரச்சனைகளில் இருந்தும் வெளிவர சுலபமாக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களில் இதுவும் ஒன்று. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.