- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆஷாட நவராத்திரியில் வெள்ளிக்கிழமை பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்

ஆஷாட நவராத்திரியில் வெள்ளிக்கிழமை பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

ஆஷாட நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது. வாராஹிக்கு சொந்தமான நவராத்திரியில், வந்திருக்கக்கூடிய வெள்ளிக்கிழமை தினம் இன்று. மாலை பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றப்பட்டு பூஜை செய்யப்படும். அந்த பூஜையில் வாராஹி அம்மனை நினைத்து எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஆஷாட நவராத்திரி ஒன்பது நாட்களும் வாராஹி வழிபாடு செய்திருந்தாலும் சரி, அல்லது வாராஹி தாயை வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் சரி, இன்று மாலை பூஜையறையில் விளக்கு ஏற்றும் போது வாராஹியை உள்ளம் உருக நினைத்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை சொல்லி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் போதும். உங்களுடைய துன்பங்கள் எல்லாம் தொலைதூரம் ஓடிவிடும்.

- Advertisement -

இன்று மாலை விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய வாராஹி மந்திரம்

ஓம் ஐயும் கிலியும் சவ்வும்
வாராஹி வசி வசி ஸ்வாஹா!

இதுதாங்க மந்திரம். வெள்ளிக்கிழமை என்றால் நம் வீடும் சுத்தபத்தமாக இருக்கும். ஆகவே பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை உச்சரிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. உங்களால் முடிந்தால் வாராகிக்கு எருமை தயிர், கருப்பு உளுந்தால் செய்யப்பட்ட வடையை நெய்வேத்தியமாக வைப்பது சிறப்பு. எருமை தயிர் கிடைக்காது என்ற பட்சத்தில் சாதாரண தயிரை வாராய்க்கு நெய்வேத்தியமாக வையுங்கள். தயிரில் உப்பு சர்க்கரை எதுவும் சேர்க்கக்கூடாது. கருப்பு உளுந்து வடை கொஞ்சம் உப்பு சேர்த்து செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களும் வாராகிக்கு நெய்வேதியம் செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனைத் தரும். இன்றைய தினம் நீல நிற சங்கப் பூ கிடைத்தால், அதை வாராஹிக்கு வைத்தால் அவள் மிகவும் சந்தோஷப்படுவாள். உங்கள் வீட்டில் வராகி திருவுருவப்படவில்லை என்றால், நீங்கள் ஏற்றி இருக்கும் விளக்குக்கு பக்கத்தில் இந்த நீல நிற சங்கு பூவை வைத்து வாராகி வழிபாடு செய்யுங்கள்.

இந்த ஆஷாட நகரத்தில் வந்திருக்கக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று உங்க வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வாராஹி யின் இந்த மந்திரத்தை சொல்லி வாராகியை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தை பின் தொடரும் தீராத துன்பங்கள் தீரும். எதிரி தொல்லை விலகும். கண் திருஷ்டி இருக்காது. மன நிம்மதியும் சந்தோஷமும் உங்களுடைய வீட்டில் நிலையாக தங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: வறுமை நிலை நீங்கி செல்வம் உயர கூற வேண்டிய மந்திரம்

ஆஷாட நவராத்திரியில் வாராகியின் அருளை பெறுவதற்கு இதை விட சுலபமான வழிபாடு வேறு எதுவும் கிடையாது. மேலே சொன்ன எருமை தயிர், சங்கு பூ, கருப்பு உளுந்து வடை இதில் எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஒரே ஒரு மாதுளம் பழத்தை வாங்கி உரித்து வாராகி தாய்க்கு நெய்வேத்தியம் வையுங்கள். அவள் நிச்சயம் மனம் குளிர்ந்து உங்களுக்கு ஆசிகளை வழங்கி விடுவாள், நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்