நம்மிடம் இருக்கும் பணம் 1 ரூபாய் கூட வீண்விரயம் ஆகவே ஆகாது. அஷ்டமி அன்று பைரவரை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்.

bairava-money

நாம் சம்பாதித்து சேமித்து வைத்திருக்கும் பணமாக இருந்தாலும் சரி, நகையாக இருந்தாலும் சரி, எந்த விதத்திலும் நஷ்டம் ஆகக்கூடாது. கையில் சேமிப்பில் உள்ள பணம் பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்லவும், வீட்டில் மகாலட்சுமி கடாட்சமாக கருதப்படும் தங்க நகைகள் என்றைக்கும் அடமானம் வைப்பதோ, விற்பதோ என்ற நிலைமைக்கு நாம் செல்லாமல் இருக்கவும் வேண்டு மென்றால் அஷ்டமி திதி அன்று பைரவரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

bairavar

வளர்பிறை அஷ்டமியிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தேய்பிறை அஷ்டமியிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு அஷ்டலட்சுமி ஆசீர்வாதத்தை நமக்கு பெற்றுத்தரும் என்பதில் ஒரு துளி கூட சந்தேகமில்லை. அஷ்டமி திதி அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து, பூஜை அறையில் உள்ள படங்களை பூக்களால் அலங்காரம் செய்து, ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, ஒரு வெள்ளை துணியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுத்தமான காட்டன் துணியாக இருப்பது நல்லது. அந்த வெள்ளைத் துணியில் 1 ரூபாய் நாணயத்தையும், உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு தங்க நகையையும் வைத்து ஒரு முடிச்சு போட்டு கட்டி, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, ‘ஓம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறையும், ‘ஓம் ஸ்வர்ண பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறையும் உச்சரித்து பைரவரை மனதார நினைத்து, வீண் விரயங்கள் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அதே அஷ்டமி திதியில் மாலை பைரவர் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். பைரவருக்கு உங்களால் முடிந்த இனிப்பு பலகாரங்களை நிவேதனமாக செய்து, அங்கு வருகை தரும் பக்தர்களுக்கு உங்களது கையாலேயே விநியோகம் செய்ய வேண்டும். குறிப்பாக லட்டு பிரசாதத்தை பைரவருக்கு நிவேதனமாக வைத்து பக்தர்களுக்கு கொடுப்பது நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதம் வரும் அஷ்டமி திதி அன்றும், அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பூஜை செய்கிறாறீர்கள் அல்லவா? அந்த நாணயத்தை எடுத்து பணம் வைக்கும் பெட்டியில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் வைத்த தங்க நகையை நீங்கள் வழக்கம்போல அணிந்து கொள்ளலாம். (அதாவது அஷ்டமி தினத்தன்று பூஜையில் வைத்த நாணயத்தை, அஷ்டமி முடிந்த அடுத்த நாள் எடுக்கவேண்டும். அஷ்டமி அன்று, அந்த நாள் இரவு முழுவதும், அந்த முடிச்சு பூஜை அறையிலேயே இருக்கட்டும்.)

kaala bairavar

8 அஷ்டமிக்கும் அந்த துணியை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். நம்பிக்கையோடு 8 அஷ்டமி திதிகளில் இந்த பரிகாரத்தை செய்து வந்தவர்கள். இந்த பரிகாரத்தை செய்து, நிறைய பேர் நல்ல பலனை அடைந்து உள்ளார்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.