வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தை கண்டு, பிரச்சினையைக் கண்டு எப்போது நாம் பயப்பட தொடங்குகின்றோமோ, அப்போதே அந்த கஷ்டம் நம்மை பின்னால் துரத்தி அடிக்க ஆரம்பித்துவிடும். கஷ்டம் வரும்போது எப்போதுமே முதலில் பயப்படுவதை நிறுத்தி விடுங்கள். பயம் வேண்டாம். வாராகியை மனதில் நினைத்து கஷ்டத்தை திரும்பி பாருங்கள். கஷ்டம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். நாம் பயந்து ஓட ஓட தான், நாய் கூட துரத்தி அடிக்கும். ஒரு முறை திரும்பி பார்த்தால் துரத்திக் கொண்டு வந்த நாய் கூட பயந்து நின்றுவிடும்.
நீண்ட நாள் துன்பங்கள், துயரத்தில் இருந்து விடுபட, பிறந்ததிலிருந்தே வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்கள், வாழ்க்கையில் சந்தோஷத்தை பெறுவதற்கு, மன பயத்திலிருந்து விடுபட்டு, போராட்டமான வாழ்க்கையில் வெற்றிக்கான, வாராஹி தேவியை இன்று இரவு எப்படி வழிபாடு செய்ய வேண்டும், எந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும், ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.
அஷ்டமியில் வாராகி வழிபாடு
இன்று 2-7-2025 புதன்கிழமை வளர்பிறை அஷ்டமி திதியானது இருக்கிறது. அது மட்டுமா, ஆஷாட நவராத்திரியின் 6வது நாள் இன்று. அஷ்டமி திதியில் துர்க்கை அம்மன், அங்காள பரமேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, வாராகி இவர்களையும் வழிபாடு செய்யலாம். அஷ்டமி திதி அன்று உக்கிர தெய்வ வழிபாடு சிறப்பான பலனை கொடுக்கும்.
துர்காஷ்டமி என்று, துர்க்கை அம்மனுக்கு கொண்டாடப்படக்கூடிய திருவிழா அஷ்டமி திதியில் தான் வரும். இந்த ஆஷாட நவராத்தியில் வந்திருக்கும் அஷ்டமி திதியை நாம் தவறவிடலாமா. இந்த நாளில் வாராகி அன்னையை வழிபாடு செய்தால் நம்முடைய நீண்ட நாள் துன்பங்கள் நிச்சயம் நீங்கும்.
உங்களுடைய வீட்டில் வாராஹி திருவுருவப்படம் சிலை வைத்து வழிபாடு செய்தாலும் சரி அல்லது வாராகி பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது, நான் வாராகி வழிபாடு செய்வதில்லை என்று சொன்னாலும் சரி, எதற்கும் கவலைப்படாதீங்க. இன்று இரவு 6:30 மணிக்கு மேல் இருள் சூழ்ந்த பிறகு, பூஜையறையில் ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வைத்துவிட்டு, வாராஹியை உங்கள் மனதில் நிறுத்தி, அம்மா தாயே என்னுடைய கஷ்டத்தை கொஞ்சம் தீர்த்துவை.
எதிரிகள் தொல்லை, வாழ்க்கையில் பிரச்சனைகள் துரத்தி துரத்தி அடிக்கிறது. வறுமை துரத்தி துரத்தி அடிக்கிறது. சந்தோஷம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. அந்த சந்தோஷத்தை நீதான் எனக்கு காட்ட வேண்டும் என்று சரணாகதியோடு, ஒரு அம்மாவிடம் உங்கள் பிரச்சனையை சொல்லுவது போல சொல்லி, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று, பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த மந்திரத்தை மூன்று முறை படித்துவிட்டு, உறங்கச் செல்லலாம்.
பூஜை அறையில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும், அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம். நீங்கள் சுத்தபத்தமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தையும் சொல்ல வேண்டும். மனதளவில் சுத்தம் இருக்க வேண்டும். உடலளவிலும் சுத்தம் இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடாமல் இருப்பவர்கள் மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்து பலன் பெறுங்கள்.
மன பயம் விடுபட வாராஹி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவியை நமஹ
ஓம் ஹ்ரீம் பயங்கரி அதிபயங்கரி ஆச்சர்ய பயங்கரி
சர்வஜன பயங்கரி ஸர்வபூத பிரேத பிசாச பயங்கரி
ஸர்வ பயம் நிவாரய சாந்திர்பவதுமே ஸதா.
இதையும் படிக்கலாமே: ராஜராஜேஸ்வரி மந்திரம்
இந்த மந்திரத்தை மூன்று முறை படித்துவிட்டு வாராகி மனதில் நினைத்துக் கொண்டு தூங்க செல்லுங்கள். விடியும் பொழுது உங்களுக்கு நல்ல பொழுதாக விடியும். தேவையற்ற மன பயம் எதிரி தொல்லை கண் திருஷ்டி எல்லாம் உங்களை விட்டு விடுபடும். நீண்ட நாள் உங்களை துரத்தும் ஒரு கஷ்டம் நிச்சயம் விடுபடும். இந்த அதிசக்தி வாய்ந்த ஆஷாட நவராத்திரி, அஷ்டமி திதியில் இந்த மந்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷத்துடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.